Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சிறைக் கைதி ரஜினி!- கபாலியின் 5 ரகசியங்கள்


நான்கு இயக்குநர்களில் தேர்வான ரஞ்சித்

ஆரம்பத்தில் ரஜினியிடம் சுந்தர்.சி,  ராகவேந்திரா லாரன்ஸ், கெளதம் வாசுதேவ் மேனன், பா. ரஞ்சித் ஆகியோர் கதை சொன்னார்கள்.  சுந்தர்.சி ரஜினிக்கான முழுக்கதை, திரைக்கதையை தயார் செய்யவில்லை ஒன்லைன் கதை மட்டுமே சொன்னார். அடுத்து ராகவேந்திரா லாரன்ஸ் சொன்ன கதை ரஜினிக்கும், தயாரிப்பாளர் தாணுவுக்கும் ரொம்பவே பிடித்து இருந்தது. முதல் பிரிண்ட் அடிப்படையில் தனக்கு உரிமை தரவேண்டும் என்று ராகவேந்திரா நிபந்தனையை முன்  வைத்ததால் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. அதன்பின் கெளதம் மேனன் சொன்ன கதை  இருவருக்கும் பிடித்து பூஜை போடுவதற்கு நல்ல நாளும் குறிக்கப்பட்டது. திடீரென கெளதம் மேனனுக்கு குட்பை சொல்லப்பட்டது. ரஞ்சிக் கதைக்கு டிக் செய்யப்பட்டது.

மோகன் ஸ்டுடியோவில் மலேசியா
    
                           கபாலி"யில் இடம்பெறும் சென்சிட்டிவ்வான காட்சிகளை மலேசியாவில் படமாக்கினால் கதையின் முக்கியமான திருப்பம் கொண்ட காட்சிகள், ரஜினியின் தோற்றம் செல்கேமரா வாயிலாக லீக் ஆகிவிடும் என்பதால் சென்னையில் இருக்கும் மோகன் ஸ்டுடியோவில் மலேசியா போலவே செட் போடப்பட்டது.  பாங்காக் தெருக்கள் போலவே  ஆர்ட் வேலை செய்யப்பட்டு 'கபாலி"யின் அதிமுக்கியமான காட்சிகள் அங்கே படமாக்கப்பட்டன.


ரஜினி-டப்பிங்-மல்லி காபி

                                  சென்னை நுங்கம்பாக்கத்தில் இருக்கும் ஃபோர்பிரேம் தியேட்டரில் நடந்தது. ரஜினி நான்கு நாட்கள் கலந்து கொண்டார். தினசரி காலை ஏழு மணி முதல் மதியம் ஒரு மணிவரை முடித்துவிட்டு போயஸ்கார்டன் சென்று வீட்டில் உணவு சாப்பிட்டு ஓய்வெடுத்துவிட்டு மாலை நான்கு மணிக்கு வந்து  இரவு ஒன்பது மணிவரை டப்பிங் பேசினார். 'கபாலி"யில் பேசும்போது தனது குரல் வளத்துக்காக தனக்கு பிடித்த மல்லி காபியை அவ்வப்போது அருந்தினார் ரஜினி.

பலமொழி வசனங்கள்

                                   கபாலி" படத்தில் மலேசிய டான் கூட்டத்திற்கு ஏற்ப, இயல்பாக இருக்க வேண்டும் என்பதற்காக பிரதான வில்லன் வேஷத்தில்  நடிக்கும் சீன நடிகர் வின்ஸ்டன் சாவோவை சென்னைக்கு வரவழைத்து சீன மொழியில் அவரது டயலாக்கை பேசவைத்தார் ரஞ்சித். 'கபாலி’ படத்தில் சீன மொழி, மலாய் மொழி,  தாய்லாந்தில் பேசப்படும் ‘தாய்’ மொழி  என்று அனைத்து மொழிகளிலும் வசனம் இடம்பெறுகிறது. 'கபாலி"யின் தமிழ் டப்பிங் வேலைகள் முடிந்து விட்டன. தெலுங்கில் டப்பிங் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. தெலுங்கில் பாடகர் மனோ படம் முழுக்க ரஜினிக்கு  வசனம் பேசுகிறார். முதன்முதலாக 'மலாய் மொழியில்’  'கபாலி" படத்தை டப்பிங் செய்ய திட்டமிட்டு வருகிரார்கள்! 

சிறைக்குச் செல்லும் கபாலி      

                              தென் ஆப்பிரிக்க மக்களால் கறுப்பு சூரியன் என்று புகழாரம் சூட்டப்பட்டவர் சிறைக்குயில் நெல்சன் மண்டேலா.  தனது கறுப்பின விடுதலைக்காக  27  ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர். அதேபோல,  தொழிலாளர்கள் விடுதலைக்காக ரஜினி பல வருடங்கள் சிறை செல்வது போல, கபாலியில் வருகிறதாம்!  மலேசியா உலகளவில் உயர்ந்து நிற்பதற்கு அங்குள்ள தோட்டங்களில் வேலை பார்த்த தமிழர்களின் சலியாத உழைப்பு என்பது மறைக்க முடியாத உண்மை.  அப்படி, கஷ்டப்பட்ட தமிழர்களை ஒரு தாதா கூட்டம் ஆட்டிப்படைக்கிறது. ஆணவத்தை தட்டிக் கேட்கிற 'கபாலி"யை சிறையில் அடைக்கிறது  மலேசிய அரசு. அப்போதும் சிறையில் இருந்தபடியே தனது தோட்டத் தொழிலாளர்கள் விடுதலைக்காக போராடும்  கதாபாத்திரத்தில் ரஜினி நடிக்கிறார்.

                                           
- எம். குணா

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மகாராஷ்ட்ரா விவசாயிகள் போராட்டம் கற்றுக்கொடுக்கும் பாடங்கள்... கவனிக்குமா தமிழ்நாடு?