வெளியிடப்பட்ட நேரம்: 15:01 (23/05/2016)

கடைசி தொடர்பு:17:36 (23/05/2016)

’எனக்கு கல்யாணம்னா நான்தான் சொல்வேன்... Mind It..!' - கறார் சமந்தா

சமந்தாவுக்கு விரைவில் திருமணம்!

இந்தச் செய்திதான் இப்போது கோலிவுட்டில் வைரலோ வைரலாகியுள்ளது. சமந்தாவைத் திருமணம் செய்யப்போகிறவர் சினிமாத் துறையைச் சேர்ந்தவர், மூன்றெழுத்து நடிகர் எனத் துவங்கி திருமணம் இந்த மாதம் என்னும் வரையில் பரவிக்கொண்டிருக்கிறது. அதுவும் இவற்றையெல்லாம் சமந்தாவே சொன்னதாகவும் செய்திகள் வந்தன.

சமந்தாவின் நெருங்கிய வட்டாரத்தில் இதுகுறித்து விசாரித்தால், சமந்தாவின் திருமணம் குறித்துப் பரவி வரும் அத்தனை செய்திகளும் வதந்தியே, எந்த மீடியாவிலும் சமந்தா தனது திருமணம் குறித்து பேசவில்லை. தற்சமயம் சமந்தா தனது பட வேலைகளில் பிசியாக இருக்கிறார்.   திருமணம் இவ்வளவு சீக்கிரம் இல்லை. அப்படி திருமணம் எனில் அதிகாரப்பூர்வமாக அவரே அறிவிப்பார் என தெரிவித்துள்ளனர். 

இதனையடுத்து தன்னைப் பற்றிப் பரவி வரும் வதந்திகளைத் தடுக்க ட்விட்டரில் சமந்தாவே இதற்கு பதில் அளித்துள்ளார். அதில் “ நானாக சொல்லும் முன் என் திருமணம் குறித்துப் பேச வேண்டாம். நான் நான் நான் சமந்தாவாகிய நானே சொல்கிறேன். நன்றி” என கூறியுள்ளார். கடந்த மாதம் (ஏப்ரல் 28) பிறந்தநாள் கொண்டாடிய சமந்தாவின் நடிப்பில் தற்சமயம் தமிழில் 24,  தெலுங்கில் பிரம்மோத்சவம் ஆகிய படங்கள் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கின்றன. இந்நிலையில் அ. ஆ, ஜனதா கேரேஜ் ஆகிய தெலுங்குப் படங்களிலும் தமிழில் வட சென்னை படத்திலும் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்