வெளியிடப்பட்ட நேரம்: 16:23 (31/05/2016)

கடைசி தொடர்பு:16:35 (31/05/2016)

ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாவாரா சாய்பல்லவி!

இசையமைப்பை ஓரங்கட்டிவிட்டு, ஹீரோயிஸத்தில் குதித்திருக்கும் ஜி.வி.பிரகாஷூக்கு அடுத்தடுத்து படங்களின் ஷூட்டிங், ரிலீஸ் என்று படு பிஸியில் இருக்கிறார்.

டார்லிங், த்ரிஷா இல்லைனா நயன்தாரா படங்களைத் தொடர்ந்து பென்சில் படமும் சமீபத்தில் ரிலீஸானது. அடுத்ததாக “ எனக்கு இன்னொரு பேர் இருக்கு” படத்தின் படப்பிடிப்பு முடிந்து, நாளை டிரெய்லரும் ரிலீஸாகவிருக்கிறது. தொடர்ந்து புரூஸ்லீ, கடவுள் இருக்கான் குமாரு படத்திலும் நடித்துவருகிறார்.

இந்தப் படங்கள் முடியும் நிலையில், ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்தப் படத்திற்கு  ஏ.ஆர். ரஹ்மான் இசை என்பது ஹைலைட்!  இப்படத்திற்காக இரண்டு பாடல்களை முடித்துவிட்டாராம் ஏ.ஆர்.ரஹ்மான்.

ஆனால் இப்படத்திற்கான நாயகி யாரென்பதே இன்றைய லேட்டஸ்ட் டாபிக். பிரேமம் படத்தில் மலர்டீச்சராக வந்த சாய்பல்லவியிடம் தான் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக சொல்லப்படுகிறது. விரைவில் உறுதியான தகவல் தெரிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க