சூர்யாவுக்கு நன்றி கூறிய பெண்! புகாரைத் திரும்பப் பெற்ற வாலிபர்

தன்னை சூர்யா அடித்துவிட்டார் என பிரேம்குமார் என்னும் இளைஞர் நேற்று முன் தினம் போலீஸில் புகார் ஒன்று கொடுத்தார். சாலையில் சென்றுகொண்டிருந்த பெண்ணின் காரில் டூவிலரில் இடித்ததோடு, அவரிடம் தகாத வார்த்தைப் பேசிச் சண்டையிட்டதாகவும், அவ்வழியில் சென்ற சூர்யா இதனைத் தட்டிக்கேட்டு அந்த வாலிபர்களை அடித்ததாகவும் செய்திகள் பரவின.

இந்நிலையில் அந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணான புஷ்பா கிருஷ்ணசாமி அன்று இரவு என்ன நடந்தது எனவும், மேலும் தக்க சமயத்தில் உதவிய சூர்யாவுக்கு நன்றிகளையும் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

அதில், ”நேற்று என்னிடம் தவறாக நடக்க முயன்ற அந்த இளைஞர்களிடம், என்மீது கை வைக்காதீர்கள் எனச் சொன்னதற்கு மிக்க நன்றி சூர்யா”, ‘என் பாதுகாப்பிற்காக நான் காருக்குள் செல்ல முயன்றபோது என்னை விடாமல் தடுத்து கார் கண்ணாடியை உடைக்கப் பார்த்தார்கள் அந்த இளைஞர்கள்”, “ மேலும் என்னிடம் பணம் கேட்டனர்” என்றெல்லாம் ட்விட் செய்திருக்கிறார்.

 ‘நான் அந்தப் பெரியக் கூட்டத்திற்குள் தனியாக மாட்டிக்கொண்டேன். ஒரு ஃபோன் போட்டு நடவடிக்கை எடுக்க இருப்பதாக அந்த இளைஞர்கள் சொன்னார்கள்” என்றும் தக்க சமயத்தில் சூர்யா வந்தார் என்றும் கூறியிருக்கிறார்.

இதனை பகிர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் சூர்யா கூறியுள்ளதாவது, “ அனைத்து நாடகங்களுக்கும் இடையில் உங்களது தைரியமான இந்த மெஸேஜ்களுக்கு நன்றியும் மரியாதைகளும்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நேற்று இரவு நிலவரப்படி சூர்யா தன்னை அடித்ததாக புகார் கொடுத்திருந்த பிரேம் குமார் புகைரைத் திரும்பபெற்றதாகத் தெரிகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!