வெளியிடப்பட்ட நேரம்: 12:20 (01/06/2016)

கடைசி தொடர்பு:12:37 (01/06/2016)

ரஜினிக்காக சிவகார்த்திகேயன் குழுவினர் எடுத்த முடிவு!

பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் “ரெமோ” படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் சென்னையில் நடந்துவருகிறது. இப்படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு, ரஜினிக்காக தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயன் மூன்று வேடத்தில் நடித்துவரும் ரெமோ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு அப்பாவாக கே.எஸ்.ரவிக்குமாரும், ஜோடியாக கீர்த்திசுரேஷும் நடித்துவருகின்றனர். ஒளிப்பதிவு பி.சி.ஸ்ரீராம். இப்படத்தில் நார்மல் பையன், முதியவர், நர்ஸ் என்று மூன்று கேரக்டர்களில் சிவகார்த்திகேயன் நடித்துவருவதாகவும் சொல்லப்படுகிறது. இப்படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் ஜூன் 9ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் அந்த நாளில், ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் கபாலி படத்தின் இசைவெளியீடும் ஜூன் 9ம் தேதி நடைபெறவிருப்பதால், ரெமோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மேலும் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் இசைவெளியீடு எப்பொழுது என்பது விரைவில் தெரிவிக்கப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. சிவகார்த்திகேயன் ரஜினி ரசிகர் என்பதும், அவரேதான் இந்த முடிவு எடுத்திருப்பார் என்றும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்