வாழ்த்துகள் ஜெனிலியா!

சச்சின், சந்தோஷ் சுப்பிரமணியம் என்று சுட்டித்தனமான நடிப்பால் தமிழ் ரசிகர்களின் மனதை ஈர்த்த நடிகை ஜெனிலியா. ஜெனிலியா - ரித்தேஷ் ஜோடிக்கு அழகிய ஆண்குழந்தை பிறந்துள்ளது. இதை ட்விட்டரில் உறுதிசெய்திருக்கிறார் ஜெனிலியாவின் கணவர் ரித்தேஷ் தேஷ்முக்.

கடந்த 2011ம் வருடம் இந்தி நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை மணந்துகொண்டார் ஜெனிலியா. திருமணத்திற்குப் பிறகு முழுநேர குடும்ப வாழ்க்கையில் இறங்கினார் ஜெனிலியா. இந்த ஜோடிக்கு ஏற்கெனவே ரியான் என்ற ஆண்குழந்தை உள்ளது.  இரண்டாவதாக மீண்டும் ஆண்குழந்தையை பெற்றெடுத்திருக்கிறார் ஜெனிலியா. இந்நிகழ்வால் பூரிப்பில் இருக்கிறதாம் ஜெனிலியாவின் குடும்பம். 

மேலும், ரித்தேஷ் தன்னுடைய ட்விட்டரில், தன் மூத்த மகன் ரியான் ட்விட்டியிருப்பது போல போஸ்ட் செய்துள்ளார். அந்த ட்விட்டில், “எனக்கு ஒரு குட்டி தம்பியை பரிசாக கொடுத்திருக்கிறார்கள். என்னுடைய எல்லா விளையாட்டுப் பொருட்களும் இனி அவனுக்குத்தான்” என்று ட்விட்டியுள்ளார். ரியானுக்கு இப்போது இரண்டு வயது.

“துஜே மேரி கசம்”, “தேரே நாள் லவ் ஹோ கயா” என்ற இரண்டு படங்களிலும் ஜெனிலியாவும், ரித்தேஷூம் இணைந்து நடித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!