கடவுள் தன் சக்தியைக் காட்டி விட்டார்..சிம்பு நெகிழ்ச்சி! | God has shown his power ...Says Simbu

வெளியிடப்பட்ட நேரம்: 13:31 (03/06/2016)

கடைசி தொடர்பு:14:26 (03/06/2016)

கடவுள் தன் சக்தியைக் காட்டி விட்டார்..சிம்பு நெகிழ்ச்சி!

வாலு படத்திற்கு பிறகு மீண்டும் பல ரிலீஸ் தேதிகள் அறிவிப்புகளுக்குப் பிறகு ’இது நம்ம ஆளு’ கடந்த வாரம் வெளியானது. கல்லூரி இளசுகளை சற்றே கவர்ந்திருக்கிறது இந்தப் படம். முக்கியமாக சிம்பு , நயன்தாரா போனில் பேசும் பகுதிகள் கொஞ்சம் நீளமாக இருப்பினும் இளைஞர்களின் விருப்பமான பகுதியாக  அமைந்துள்ளன.

படத்திற்கு கலவையான விமர்சனம் கிடைத்திருக்கும் நிலையில் சிம்பு தன் மனநிலை குறித்து பகிர்ந்துள்ளார். ”என் படத்தை மக்கள் வெற்றியடையச் செய்யவேண்டும் என நினைத்ததில் எனக்கு சந்தோஷம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அனைத்தும் எனக்காக நடந்திருக்கிறது. என் கடினமான சூழலிலும் கூட யாரையும் நான் குற்றம் கூறவோ, அல்லது எனது பொறுமையை இழக்கவோ இல்லை”.

”எனக்குத் தெரியும் இந்த நாள் வரும் என்பது. அது இப்போது நடந்திருக்கிறது. கடவுள் தனது சக்தியை காட்டிவிட்டார். அனைவருக்கும் நன்றி” எனக் கூறியுள்ளார் சிம்பு. 

பீப் பிரச்னை ஓய்ந்துவிட்ட நிலையில் தற்போது ‘அச்சம் என்பது மடமையா” டிரெய்லரும் நேற்று வெளியாகி சிம்பு ரசிகர்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் பின்னணி, மற்றும் கௌதம் மேனன் இயக்கம், எல்லாவற்றிற்கும் மேல் சிம்புவின் ரொமான்ஸ், ஆக்‌ஷன் என டிரெய்லருக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்