பொண்ணுனாலே போராட்டம்தான்! - உரைக்கச் சொல்லும் ரித்திகா சிங் | If Girl means struggle , Says Ritika Singh

வெளியிடப்பட்ட நேரம்: 17:39 (03/06/2016)

கடைசி தொடர்பு:13:02 (04/06/2016)

பொண்ணுனாலே போராட்டம்தான்! - உரைக்கச் சொல்லும் ரித்திகா சிங்

விளையாட்டுத்துறையில்  பெண்ணாக பல பிரச்னைகளை கடந்துபோராடி வெற்றிப்பெரும் கதையை தளமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமே இறுதிச்சுற்று. இதில் நடித்த ரித்திகா சிங் உண்மையிலேயே தற்காப்புக் கலை வீராங்கனை.

இவரிடம்  பெண்கள் விளையாட்டுத்துறையில் எத்தனை சாதித்தாலும் இன்னும் சரியாக அங்கீகரிக்கப்படாமல்தான் இருக்கிறார்கள் என்பது நிதர்சனத்தை தாண்டிய உண்மை. அதற்கான காரணங்கள் என்ன...மாற்றத்திற்கான வழிகள்... பெண்கள் விளையாட்டுத்துறையில் சந்திக்கும் பிரச்னைகள் உள்ளிட்டவை குறித்து கேட்டபோது, 

" என் பெற்றோர்கள் எனக்கு சின்னச் சின்ன விஷயத்தில் கூட நிறைய ஊக்கம் கொடுத்தாங்க. அதுவே மிகப்பெரிய உந்து சக்தியா எனக்கு இருந்துச்சு. ஆனால் நிறைய பெண்கள் தங்களை நிரூபித்துக்கொள்ளவே போராட வேண்டியிருக்கும்.

ஏழையா இருந்தாலும், விளையாட்டில் சாதிக்கலாம் என்பதெல்லாம் படத்திற்கு மட்டும்தான் சாத்தியமாகும். ஆனால் உண்மையில் ஸ்போர்ட்ஸில் பெரிய அளவில் வரணும்னா நிறைய பணம் தேவை என்பதுதான் உண்மை. பணம் இருந்தால்தான் நல்ல பயிற்சியாளர் கிடைப்பாங்க. அப்போதான் நம்மை நாம் ஷார்ப் பண்ணிக்க முடியும். அதைத்தாண்டி நல்ல மைதானங்கள் இருப்பது இல்லை.

ஒரு ஆணாக இருந்தால் காலை 4 மணிக்கு கூட தெருக்களில் ஓடி பயிற்சி செய்ய முடியும். ஆனால் பெண்களுக்கு இது சாத்தியமே இல்லை. இதனை நம் சமுதாயத்திற்கும் புரிய வைக்க முடியாது. உடல் ரீதியாக ஏற்படக்கூடிய பிரச்னைகளைக் கூட தாங்கிக் கொள்ளலாம். ஆனால் நம்மைச் சுற்றி இருப்பவர்களின் ஏளனப்பேச்சுகள் தரும் மனஅளவிலான பாதிப்புகள் நம் முன்னேற்றத்தில் தேக்கத்தை ஏற்படுத்தும். விளையாட்டுத் துறையில் பெண்கள் சாதிக்கவே முடியாது என்ற நிலையும், அதுவும் ஏழைப் பெண்கள் கனவு மட்டுமே காண முடியும் என்ற நிலையும் இந்த சமூகத்தில் இருந்து அகல வேண்டும். அதற்கு அரசு ஆவண செய்ய வேண்டும் . 

உண்மையில் மாஸ்டர் மாதவனின் மனதை மட்டுமல்ல தமிழக ரசிகர்களையும் தன் நடிப்பாலும் திறமையாலும் வென்றுவிட்டார் ரித்திகா சிங். இவரைப் போன்றே பல மனிதிகள் தலை நிமிரட்டும்!  

- சு.சூர்யா கோமதி -

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்