உறுதியானது கபாலி ஆடியோ ரிலீஸ் தேதி! | Official : 'Kabali' audio launch confirmed!

வெளியிடப்பட்ட நேரம்: 12:48 (04/06/2016)

கடைசி தொடர்பு:13:49 (04/06/2016)

உறுதியானது கபாலி ஆடியோ ரிலீஸ் தேதி!

எதிர்பார்ப்புகளுக்கான விடையாக, கபாலி ஆடியோ ரிலீஸ் தேதியை அறிவித்திருக்கிறார் ’கபாலி’ திரைப்பட தயாரிப்பாளர் தாணு.

மலேசியா டான்’ஆக ரஜினி வித்தியாசமான கெட்டப்பில் “கபாலி” படத்தில் நடித்திருக்கிறார் என்பதே படத்திற்கான பல்ஸை எகிறவைத்துவருகிறது. இதன் இசை வெளியீட்டுக்காக ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், வரும் ஜூன் 12ம் தேதி இசைவெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்திருக்கிறது.

ஆடியோ வெளியீடு எங்கு நடைபெறும் என்றும் எந்தெந்த பிரபலங்கள் கலந்துகொள்வார்கள் என்ற செய்தி விரைவில் தயாரிப்பாளர் தாணு வெளியிடுவார் என்று கூறப்படுகிறது. மேலும் சந்தோஷ் நாராயணன் ஏற்கெனவே, கபாலி படத்திற்கான பாடல்களை முடித்து ஒரிஜினல் பிரதியை வழங்கிவிட்டார். கபாலி ஆடியோ உரிமையையும் திங் மியூசிக் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

அட்டகத்தி, மெட்ராஸ் படங்களைத் தொடர்ந்து ரஞ்சித் இயக்கியிருக்கும் படம் கபாலி,  இப்படத்தில் ரஜினியுடன் ரொமான்ஸ் செய்திருக்கிறார் ராதிகா ஆப்தே. பிற கலைஞர்களான தன்ஷிகா, கலையரசன், கிஷோர், தினேஷ் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர். மேலும் இப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக தைவான் நடிகர்  “வின்ஸ்டன் சாவோ” நடித்திருக்கிறார்.  (முழுமையான பேட்டிக்கு க்ளிக்குக )

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்