வெளியிடப்பட்ட நேரம்: 14:25 (04/06/2016)

கடைசி தொடர்பு:12:17 (06/06/2016)

கல்லூரிப் படிப்பை நிறுத்தினாரா லட்சுமி மேனன்?

லட்சுமி மேனன் கல்லூரிப் படிப்பை நிறுத்தினார் என கேரள சினிமா உலகில் செய்திகள் பரவிக்கொண்டிருந்தன.

இந்நிலையில் லட்சுமி மேனனுக்கே தொடர்புக்கொண்டு என்ன திடீர் ட்ரெண்ட் எனக் கேட்டப்போது, லட்சுமி மேனனின் அம்மா பதில் அளித்தார், “ படங்கள் அதிகமாக இருப்பதால் தொடர்ந்து கல்லூரிக்கு செல்ல முடியாமல் போனது. அதனால் தொலைதூரக் கல்வியாக மாற்றி படிக்கவிருக்கிறார். ஆனால் படிப்பையெல்லாம் நிறுத்தவில்லை” என்றார். 

கல்லூரி பற்றிய கேள்விக்கு ``அது ஒரு பெரிய கதை. `ஸ்கூல் முடிச்சுட்டு காலேஜ் போனா, சினிமாவுல காட்டுற மாதிரி கெத்தா ஜாலியா இருக்கும். செமையா என்ஜாய் பண்ணலாம்’னு நினைச்சேன். அங்கே போனாத்தான் தெரியுது ஸ்கூலைவிட காலேஜ் வெரி ஸ்ட்ரிக்ட். அதுவும் எங்க இங்கிலீஷ் டிபார்ட்மென்ட் செம மொக்கை. மூணு மாசம்தான் காலேஜ் போனேன். அதுலயும் பாதி நாள் க்ளாஸுக்குப் போகலை. ஏகப்பட்ட அசைன்மென்ட்ஸ் வேறு. அடப் போங்கப்பானு காலேஜுக்கு டாட்டா பை பை சொல்லிட்டேன்.'' '' இப்படி விகடனுக்கு சமீபத்தில் அளித்த பேட்டியில் லட்சுமி மேனனே கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

’வேதளம்’ படத்தில் அஜித்துக்குத் தங்கச்சியாகவும், மிருதன் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாகவும் நடித்த லட்சுமி மேனன் தற்சமயம் ரத்ன சிவாவின் இயக்கத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ‘றெக்க’ படத்தில் நடித்து வருகிறார்.

 கும்பகோணம், காரைக்குடி, மற்றும் மதுரை பகுதிகளில் படமாக்கப்பட்டு வரும் இப்படத்தில் லட்சுமி மேனன் கல்லூரி மாணவியாக நடிப்பது குறிப்பிடத்தக்கது. கௌதம் கார்த்திக்குடன் லட்சுமி மேனன் இணைந்து நடித்த ‘சிப்பாய்’ வெளியாவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த வருடம் சிப்பாய் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்