அட., பிரேமம் நாயகனுடன் இணையும் அட்லீ

விஜய் நடிப்பில் வெளியான தெறி படத்தை இயக்கியவர் அட்லீ. ஆர்யா, நயன்தாரா நடித்த “ராஜா ராணி” படத்தின் ஹிட்டைத் தொடர்ந்து விஜய்யை இயக்கிய அட்லி, தற்பொழுது  பட தயாரிப்பில் இறங்கியிருக்கிறார்.

அட்லி தயாரிப்பில் தற்பொழுது உருவாகிவரும் படம் “ சங்கிலி புங்கிலி கதவ தொற”, இப்படத்தில் ஜீவா, ஸ்ரீதிவ்யா, சூரி, ராதிகா உள்ளிட்ட பலர் நடித்துவருகின்றனர். இப்படத்தை புதுமுக இயக்குநரான ஹரி இயக்கிவருகிறார். இவர் கமல்ஹாசனிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தை “A For Apple" என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிப்பாளராகியிருக்கும் அட்லி, அடுத்ததாக ஒரு புதிய படத்தை தயாரிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. அட்லியின் உதவி இயக்குநரே அப்படத்தை இயக்கவிருக்கிறார் என்றும் இப்படத்தில் ஹீரோவாக நடிக்க நிவின்பாலியிடம் பேச்சுவார்த்தை நடந்துவருவதாக சொல்லப்படுகிறது.

“நேரம்” படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நிவின்பாலி. மேலும் மலையாளத்தில் இவர்நடித்து சென்றவருடம் வெளியான “பிரேமம்” படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!