அஜித்தின் அடுத்தப் படத்தின் நாயகி யார்? ரசிகர்கள் எதிர்பார்ப்பு

வீரம், வேதாளம் படங்களின் வெற்றியைத் தொடர்ந்து அஜித்துடன் மீண்டும் இணைகிறார் சிறுத்தை சிவா. “அஜித் 57” படத்திற்கான படப்பிடிப்பு ஜூலையில் தொடங்கவிருப்பதால், அதற்கான முதல்கட்ட வேலைகள் தீவிரமாக நடந்துவருகிறதாம்.

ஆனால் இப்படத்தில் யார் நாயகி என்பது இன்னும் முடிவாகவில்லை என்று கூறப்படுகிறது. அஜித்துக்கு ஜோடியாக நடிக்க பல முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடந்துவருகிறதாம். குறிப்பாக த்ரிஷா, அனுஷ்கா மற்றும் நயன்தாரா இவர்களில் ஒருவரை நடிக்கவைக்க தீவிர யோசனையில் இருக்கிறாராம் இயக்குநர் சிவா.

இப்படத்தில் அனிருத் இசை, வெற்றி ஒளிப்பதிவு செய்யவிருப்பது மட்டும் உறுதியாகியிருக்கிறது. சத்யஜோதிபிலிம்ஸ் சார்பில் தியாகராஜன்  இப்படத்தை தயாரிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

அஜித்துக்கு யாரு ஜோடின்னு சீக்கிரம் சொல்லுங்க” என்பதே ரசிகர்களின் கருத்தாக இணையத்தில் பரவிவருவது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!