அனேகன் தாக்கம்.. கே.வி.ஆனந்த் கவனம்! | K.V.Anand taking extra care for his next project

வெளியிடப்பட்ட நேரம்: 11:32 (08/06/2016)

கடைசி தொடர்பு:12:03 (08/06/2016)

அனேகன் தாக்கம்.. கே.வி.ஆனந்த் கவனம்!

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய்சேதுபதி, டி.ராஜேந்தர் நடிக்கவிருக்கும் புதிய படத்திற்கான ஹீரோயின் யாரென்பது முடிவாகாமல் இருந்த நிலையில், தற்போது நாயகியை தேர்ந்தெடுத்துவிட்டனர். 

பிரேமம், காதலும் கடந்துபோகும் ஆகிய படங்களில்  நடித்த மடோனா செபஸ்டியனை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள் என்கிறது கோலிவுட் வட்டாரம். விஜய்சேதுபதியுடன் மடோனா இணையும் இரண்டாவது படம் இது.

இதற்கு முன் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் வெளியான  “அனேகன்”, எதிர்பார்த்த அளவிற்குபோகவில்லை என்று சொல்லப்படுகிறது. அதனால் அடுத்த படத்தின் கதை மற்றும் நடிகர்கள் விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்கிறாராம் இயக்குநர் கே.வி.ஆனந்த்.  இப்படத்திற்கான கதை, திரைக்கதை, வசனத்தை கே.வி.ஆனந்துடன் இணைந்து சுபா மற்றும் கபிலன் வைரமுத்து எழுதுகின்றனர்.

பல பிரம்மாண்ட படங்களைத் தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க, ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார். அபிநந்தன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்திற்கான படப்பிடிப்பு ஜூலை மாதம் தொடங்கவிருக்கிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close