வெளியிடப்பட்ட நேரம்: 11:09 (10/06/2016)

கடைசி தொடர்பு:11:29 (10/06/2016)

சீனா வரை குறிவைக்கும் ரஜினியின் 2.0

ஷங்கர் இயக்கத்தில் வெளியான எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமான 2.O படத்தில் தற்பொழுது நடித்துவருகிறார் ரஜினி. இப்படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் மற்றும் இசை வெளியீட்டு விழாவை வெளியிடுவது பற்றி படக்குழு தீவிரமாக ஆலோசித்துவருகிறது.

ரஜினி தற்பொழுது அமெரிக்காவில் இருக்கிறார். அவர் அங்கிருந்து திரும்பியவுடன் மீண்டும் 2.O படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என கூறப்படுகிறது. தற்பொழுது சென்னை மற்றும் டெல்லி பகுதியில் செட் அமைத்து படப்பிடிப்பை நடத்திவருகிறார்கள் படக்குழுவினர். 

இப்படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை செப்டம்பர் மாதத்திலும், படத்தை 2017ம் ஆண்டு இறுதியிலும் வெளியிட படக்குழு  திட்டமிட்டுவருகிறது. மேலும் சீனாவிலும் இப்படத்தை மிகப்பெரிய அளவில் வெளியிடவும் முடிவெடுத்துள்ளது.

தவிர, படத்தின் இசையை தொழில்நுட்ப வசதிகள் மூலமாக பல்வேறு வடிவங்களில் ரசிகர்களுக்கு எடுத்துச்செல்லவும் படக்குழு தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஷங்கர் இயக்கிவரும் இப்படத்தை 350கோடி ரூபாய் பொருட்செலவில் லைக்கா நிறுவனம் தயாரித்துவருகிறது. ரஜினிக்கு வில்லனாக அக்‌ஷய் குமார் நடித்துவருகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் நிரவ் ஷா படத்திற்கு ஒளிப்பதிவு செய்துவருகிறார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்