வெளியிடப்பட்ட நேரம்: 13:40 (14/06/2016)

கடைசி தொடர்பு:14:32 (14/06/2016)

’சார்லி’ தமிழ் ரீமேக்கில் இவரா!

கடந்தவருடம் டிசம்பர் 24ம் தேதி கிருஸ்துமஸ் விடுமுறையில் ரிலீஸான மலையாளப் படம் சார்லி. துல்கர்சல்மான், பார்வதி, அபர்ணா, கோபிநாத் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி விமர்சன ரீதியிலும், வசூல் ரீதியிலும் பெரிதும் பேசப்பட்ட திரைப்படம்.

அதுமட்டுமின்றி சென்ற ஆண்டுக்கான கேரள மாநில விருதுகளில், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குநர், சிறந்த ஒளிப்பதிவு உள்ளிட்ட எட்டு பிரிவுகளில் வென்றது சார்லி திரைப்படம். இதனால் இப்படத்திற்கான ரீமேக் உரிமையை வாங்குவதில் போட்டா போட்டியாக இருந்த நிலையில்,  இந்தி திரையுலகின் பிரபல நிறுவனமான ப்ரமோத் பிலிம்ஸ் அதைக் கைப்பற்றியிருக்கிறது.

அதைத் தமிழில் வெளியிட தீர்மானித்து, துல்கர்சல்மான் வேடத்தில் நடிக்க தமிழின் முன்னணி நடிகர்களிடம் தேடுதல் வேட்டை நடத்தினார்கள். இறுதியில் மாதவனை ஓகே செய்திருக்கிறது தயாரிப்புக் குழு.  இயக்குநர் விஜய் இயக்க, மாதவன் நடிக்கவிருப்பது உறுதியாகியிருக்கிறது.

விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா நடிக்கும் தேவி படத்தின் படப்பிடிப்பு தற்பொழுது நடந்துவருகிறது. தொடர்ந்து ஜெயம்ரவியின் படத்தை இயக்கவிருக்கிறார் அவர். இவ்விரண்டு படங்களையும் முடித்த பின்னர்,  நவம்பர் 15ம் தேதிக்கு மேல் சார்லி படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறியிருக்கிறார்கள்.

இறுதிச்சுற்று திரைப்படத்தின் மூலமாக மீண்டும் தமிழ் திரையுலகில் மாதவனின் ரேட்டிங் எகிறிக்கிடக்கும் நிலையில், சார்லி படம் மாதவனை அடுத்த லெவலுக்கு எடுத்துச் செல்லும் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்