கபாலியிலிருந்து முற்றிலும் மாறுபட்டு... 2.0!

 

ஷங்கரின் 2.0 ஷுட்டிங் நேற்று நூறு நாளைத் தொட்டிருக்கிறது. தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தத் தகவலைப் பகிர்ந்துள்ள ஷங்கர் ஐம்பது சதவிகித ஷூட்டிங் முடிந்து விட்டது என்று அறிவித்திருக்கிறார்.

 

அக்‌ஷய் குமார் சம்பந்தப்பட்ட அனைத்துக் காட்சிகளும் படமாக்கப்பட்டு விட்டதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், ரஜினி, அக்‌ஷய்குமார் இருவரும் பங்குபெறும் க்ளைமாக்ஸ் காட்சியும், டெல்லி ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் வைத்து படமாக்கப்பட்டு விட்டதாம்.

அக்‌ஷய் குமார் வில்லனாக நடிக்க இருந்த வேடத்தில் முதலில் நடிக்க இருந்தவர் இவர் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். பிறகு சில காரணங்களால் அது முடியாமல் போக, இப்போது அக்‌ஷய் குமார் நடித்துக் கொண்டிருக்கிறார்.

ஒரே சமயத்தில்  கபாலி, 2.0 என இரண்டு ரஜினி படங்கள் அறிவிப்பில் இருந்தன. தாடியுடன் டானாக நடிக்கும் ரஜினியின் 2.0 படத்தின் தோற்றம் வெளியிடப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று ஷங்கர் வெளியிட்ட இந்த ஸ்டில்லைப் பார்த்ததும் ’அட.. ரெண்டுக்கும் சம்பந்தமே இல்லையே’ என்று வியந்து போயிருக்கிறார்கள் ரஜினி ரசிகர்கள்.

மிகுந்த பொருட்செலவில் உருவாகும் 2.0, 2017ம் ஆண்டு திரைக்கு  வரும் எனத் தெரிகிறது.

 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!