பிரபல இயக்குநர் ஏ.சி. திருலோகச்சந்தர் காலமானார்

 

 

பிரபல திரைப்பட இயக்குநர் ஏ.சி.திருலோகச்சந்தர் சென்னையில் இன்று மாலை  மூன்று  மணிக்கு காலமானார். 

எம்ஜியார், சிவாஜி உள்ளிட்ட பிரபல நடிகர்களை வைத்து பல படங்களை இயக்கியவர் ஏ.சி. திருலோகச்சந்தர்.  அ960களில் திரைத்துறைக்கு நுழைந்த இவர், அன்பே வா, தெய்வமகன், அதே கண்கள் போன்று பல மெகா ஹிட் படங்களைக் கொடுத்தவர். கடந்த சில நாட்களாகவே உடல்நிலை சரியில்லாமல் இருந்துவந்த இவர், இன்று (15 ஜூன் 2016) மாலை மூன்று மணி அளவில் காலமானார்.

இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். சென்னை, கானத்தூரில் மாயாஜாலுக்கு எதிரில்  உள்ள  இவரின் மூத்த மகனது வீட்டில் நாளை மாலை நான்கு மணிக்கு இறுதிச் சடங்கு நடைபெறுகிறது.

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!