சூப்பர் ஸ்டார்-ன்னா அவர் ஒருத்தர்தான்! அக்‌ஷய்குமார் ஓபன் டாக்! | Rajini sir is the only superstar in the country: Akshay Kumar

வெளியிடப்பட்ட நேரம்: 11:44 (16/06/2016)

கடைசி தொடர்பு:11:55 (16/06/2016)

சூப்பர் ஸ்டார்-ன்னா அவர் ஒருத்தர்தான்! அக்‌ஷய்குமார் ஓபன் டாக்!

’வெல்கம் டு த ஸ்டேஜ் சூப்பர் ஸ்டார் அக்‌ஷய்குமார்’

மேடையிலிருந்து இப்படி நிகழ்ச்சி தொகுப்பாளினியின் குரல் கேட்கிறது. இந்தியின் கில்லாடி ஹீரோ அக்‌ஷய் குமாரைத்தான் மேடைக்கு அழைக்கிறார்கள். “ சூப்பர் ஸ்டார் அக்‌ஷய் குமார்” என்று நிகழ்ச்சித் தொகுப்பாளர் அழைப்பதை கவனிக்கிறார் அக்‌ஷய்.

சின்னதாக சிரிப்புடன் பேசிக் கொண்டே மேடை ஏறிய அக்‌ஷய்குமார், “தொகுப்பாளினி  என்னை சூப்பர் ஸ்டார் என்று அழைத்தார், ஆனால் இந்த நாட்டிற்கே ஒரே சூப்பர் ஸ்டார் தான். அது ரஜினிகாந்த் மட்டும் தான்” என்று சொல்லி முடிப்பதற்குள்ளேயே அரங்கம் அதிரும் கைத்தட்டல்களும் விசில்களும். அக்‌ஷய்குமாரின் இந்த ‘ஓபன் டாக்’  இந்தித் திரையுலகையே கிறங்கடித்திருக்கிறது.

மேலும் சென்னை, ரஜினி, எந்திரன் 2.O படம் என்று பலவிஷயங்களை பகிர்ந்துகொண்டார் அக்‌ஷய்குமார்.  தமிழில் அறிமுகமாகும் முதல் படமே ரஜினிக்கு வில்லனாக ஷங்கர் இயக்கத்தில் எந்திரன் இரண்டாம் பாகமான 2.0 என்பதில் பெருமை கொள்கிறாராம். “ ரஜினி சாருடன் வேலைப் பார்த்தது மிகவும் கவுரவமாக கருதுகிறேன். என்னுடைய கனவு நிஜமாகியிருக்கிறது. இந்தப்படத்தில் என்னுடைய நடிப்பிற்கு, ரசிகர்களின் பதில் என்ன என்பதை தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறேன். இன்னும் நிறைய தமிழ் படங்களில் அங்கமாக வேண்டும் என்பதே என் ஆசை” என்றார் அக்‌ஷய்குமார்.

பல வருடங்களுக்கு முன்பு சென்னைக்கு சில இந்தி படங்களின் படப்பிடிப்பிற்காக வந்திருக்கிறேன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு 2.O படத்திற்கான படப்பிடிப்பிற்கு வர வாய்ப்பு கிடைத்திருக்கிறது. தென்னிந்திய உணவுகளுக்கு நான் மிகப்பெரிய ரசிகன். மசாலா தோசை, உப்புமா, தேங்காய் சட்னி, குறிப்பாக, காரமான சாம்பார் சாதம் என்று  சென்னையின் பெருமைகளை அடுக்கிக்கொண்டே சொல்லி முடித்தார் அக்‌ஷய்.

 


 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்