வெளியிடப்பட்ட நேரம்: 15:41 (16/06/2016)

கடைசி தொடர்பு:15:56 (16/06/2016)

ஒரே மாதத்தில் வெளியாகும் விக்ரம், சூர்யா பட இசை!

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வெளியாகவிருக்கும் பிரம்மாண்டப் படங்களின் இசை ஜூலைமாதமே அடுத்தடுத்து வெளியாகும் என்று ஹாரிஸ் ஜெயராஜ் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் என்னை அறிந்தால், அனேகன், நண்பேன்டா என்று மூன்று படங்களுக்கு இசையமைத்த ஹாரிஸ், இந்த வருடம் கெத்து படத்திற்கு இசையமைத்தார். அடுத்ததாக இவர் இசையில் இருமுகன் மற்றும் சிங்கம் 3 படங்கள் வெளியாகவிருக்கிறது.

அரிமா நம்பி இயக்குநர் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் நயன்தாரா, விக்ரம், நித்யாமேனன் நடிப்பில் உருவாகிவரும் படமே இருமுகன். இப்படத்தில் விக்ரம் இரண்டு வேடத்தில் நடித்துவருகிறார்.

ஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகிவரும் படமே சிங்கம் 3. அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் நடிப்பில் உருவாகும் சிங்கம் படத்தின் மூன்றாவது பாகம்.

 இவ்விரு படங்களுக்குமே ஜூலையில் ஆடியோ ரிலீஸ் இருக்கும் என்று உறுதிப்படுத்தியுள்ளார் ஹாரிஸ் ஜெயராஜ்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்