அட., பேயாக நடிக்கும் ரெஜினா! | 'Nenjam Marappathillai' has Regina Cassandra playing a ghost

வெளியிடப்பட்ட நேரம்: 15:22 (21/06/2016)

கடைசி தொடர்பு:18:17 (21/06/2016)

அட., பேயாக நடிக்கும் ரெஜினா!

செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகிவரும் படமே “நெஞ்சம் மறப்பதில்லை”. இப்படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது.

சிம்பு நடிப்பில் கான் படத்தின் படப்பிடிப்பிலிருந்த செல்வராகவன், தீடீரென நிறுத்திவிட்டு, எஸ்.ஜே.சூர்யாவை வைத்து "நெஞ்சம் மறப்பதில்லை" படத்தின் படப்பிடிப்பை தொடங்கினார். பேய் கதையை மையமாக வைத்து இப்படம் உருவாகிவருகிறது.

எஸ்.ஜே.சூர்யாவுடன் ரெஜினா, நந்திதா உள்ளிட்ட பலரும் நடித்துவருகின்றனர். ஈ.சி.ஆர் சாலையில் உள்ள பங்களாவில் படத்திற்கான காட்சிகள் படமாக்கப்பட்டுவருகின்றன. மீண்டும் செல்வராகவன் - யுவன் சங்கர்ராஜா கூட்டணியில் படத்திற்கு இசை உருவாவதால் எதிர்பார்ப்பும் கூடியிருக்கிறது. 

இந்நிலையில் யுவன்,“ நெஞ்சம் மறப்பதில்லை” படத்திற்கான எல்லா பாடல்களையும் முடித்துவிட்டதாகவும், படத்திற்கான தீம் பாடலுக்கான பணிகள் நடந்துவருவதாகவும் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இப்படத்தில் ரெஜினா பேயாக நடித்திருப்பதாகவும், செல்வராகவனின் முதல் பேய் படம் என்றும், தமிழ் சினிமாவிலேயே  முற்றிலும் வித்தியாசமான பேய்படமாக இருக்கும் என்றும் படக்குழுவினர் தெரிவித்தனர்.

படத்தை கெளதம் மேனன் மற்றும் மதன் இருவரும் இணைந்து தயாரித்துவருகிறார்கள்.

“நெஞ்சம் மறப்பதில்லை” ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close