விஷ்ணுவிஷால் படத்தில் சுசீந்திரன் கவனம்! உதயநிதி படம் எப்போது? | Director Suseenthiran to focus on Vishnu - Vishal's Project

வெளியிடப்பட்ட நேரம்: 17:33 (21/06/2016)

கடைசி தொடர்பு:17:37 (21/06/2016)

விஷ்ணுவிஷால் படத்தில் சுசீந்திரன் கவனம்! உதயநிதி படம் எப்போது?

விஷால் நடிப்பில் உருவான பாயும் புலி படத்திற்குப் பிறகு இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் உதயநிதி, விஷ்ணுவிஷால், மஞ்சிமா மோகன் உள்ளிட்டோர் நடிப்பில் ஓர் படம் தொடங்கப்பட்டது.

பூஜையுடன் தொடங்கிய இப்படம், பத்து நாட்கள் படப்பிடிப்பு சென்று பின்னர், ஒத்திவைக்கப்பட்டது. இப்படத்தில் பல்வேறு நடிகர் - நடிகைகள் நடிக்க இருக்கிறார்கள். இதனால் தேதிகள் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. நடிகர்களுக்கான தேதிகள் சரி செய்யப்பட்ட பிறகே இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும்" என்று தெரிவித்தார்கள்.

இதனால் சுசீந்திரன் தன்னுடைய அடுத்தப் படத்திற்கான வேலையில் பிஸியாகிவிட்டார். விஷ்ணுவிஷால் கதாநாயகனாக நடிக்கும் படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகளை தொடங்கிவிட்டாராம் சுசீந்திரன். மேலும் உதயநிதி படத்திற்கு நாயகியாக கமிட்டான மஞ்சிமா மோகன் தான் இப்படத்தில் விஷ்ணுவிற்கு ஜோடியாக நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இப்படத்திற்கான படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்கவிருக்கிறது.

தவிர, இப்படத்தை சுசீந்திரனும், விஷ்ணுவிஷாலும் சேர்ந்தே தயாரிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கெனவே விஷ்ணுவிஷால் நடித்து, தயாரித்த “வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” வசூல் ஹிட் அடித்ததால் இப்படத்தையும் தயாரிக்க முன்வந்திருக்கிறார் விஷ்ணு.

உதயநிதி படத்திற்கு கமிட்டான அனைவருமே அடுத்தப் படத்தில் பிஸியாகிவிட்டனர். ஆனால் சுசீந்திரனுடனான படம் தள்ளிவைக்கப்பட்டுள்ளதால், உதயநிதி அடுத்தப் படம் பற்றி இன்னும் அறிவிக்கவில்லை.  எனினும், உதயநிதி -சுசீந்திரன் படம், விஷ்ணுவிஷாலுடனான சுசீந்திரன் படத்திற்கான படப்பிடிப்பு முடிந்த பின்னரே தொடங்குவார்கள் என்று சொல்லப்படுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close