வெளியிடப்பட்ட நேரம்: 11:47 (22/06/2016)

கடைசி தொடர்பு:11:49 (22/06/2016)

பூஜையுடன் தொடங்கிய வடசென்னை படத்தின் படப்பிடிப்பு!

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் “வடசென்னை” படத்திற்கான படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது.

“ பொல்லாதவன், ஆடுகளம் படங்களின் இயக்குநர் வெற்றிமாறனுடன் என்னுடைய அடுத்தப் படத்திற்கான, படப்பிடிப்பு இன்று தொடங்கியது” என்று தனுஷ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

வடசென்னை படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கவிருக்கிறார். டேனியல் பாலாஜி, சமுத்திரகனி ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

எல்லோரையும் விட எனக்குத்தான் பதட்டம் அதிகமா இருக்கு. வடசென்னை என்ற வார்த்தைய கேட்டாலே பயமா இருக்கு. தொடர்ந்து அந்தப் படம் பற்றி சொல்லிட்டே இருக்கோம் ஆனா, வெவ்வேறு காரணங்களால அது தள்ளிப்போய்ட்டே இருக்கு” என்று விகடனுக்கு அளிக்கப்பட்ட பேட்டியில் முன்னர் கூறினார் வெற்றிமாறன். அவர் அவ்வாறு கூறியதற்கு நிறைய காரணங்கள் இருந்தன.

என்ன காரணமென்றால், தங்கமகன் படம் முடிந்ததும் தனுஷ் பிரபுசாலமன் இயக்கத்தில் “தொடரி” படத்திற்கும் அதைத் தொடர்ந்து துரை செந்தில் குமார் இயக்கத்தில் “கொடி” படத்திற்கான படப்பிடிப்பில் கலந்துகொண்டார். இவ்விரு படங்களும் முடிந்ததும் வடசென்னை படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கெளதம் மேனன் இயக்கத்தில் “எனை நோக்கி பாயும் தோட்டா” படத்திற்கான படப்பிடிப்பிற்கு சென்றுவிட்டார் தனுஷ்.

இதற்கு நடுவே கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்திலும் ஒரு படம் நடிக்கவிருப்பதாக ட்விட்டரில் தெரிவித்தார் தனுஷ். அதுமட்டுமின்றி ஹாலிவுட் படமொன்றிலும் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். இதனால் வடசென்னை எப்பொழுது தொடங்கும் என்பது கேள்விக்குறியாகவே இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இப்படத்திற்காக பிரம்மாண்ட ஜெயில் போன்ற அரங்கு அமைத்துள்ளனர். அதில், விரைவில் படப்பிடிப்பை நடத்தவிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் படத்திற்கு சந்தோஷ்நாராயணன் இசையமைக்கப்போவதாக சொல்லப்படுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்