பாகுபலிக்கு சவால், சங்கமித்ரா, தீபிகா படுகோன்! - சுந்தர்.சியின் ஆக்‌ஷன் பிளான்


சுந்தர்.சி. அரண்மணை, அரண்மனை-2 என்று போட்ட காசுக்குப் பழுதில்லாமல் தயாரிப்பாளரை படத்தின் வெற்றியால் மகிழ்விக்கும் இயக்குநர்.

’ஒரு கட்டத்துல பத்து பேரை அடிக்கற ரௌடி கதாபாத்திரங்களே வந்ததால, நடிக்க வேணாம்னு முடிவு பண்ணினேன். அரண்மனைலாம் எடுத்துட்டீங்கன்னா படத்துல நாயகனா இல்லாம ஒரு கதாபாத்திரமா மட்டும்தான் வருவேன்’ என்கிறார். ஆனால், அதைத் தவிர்த்து ஒரு சென்சேஷனல் செய்தியைச் சொல்லியிருக்கிறார்.

 கடந்த ஏழு  மாதங்களாக ஒரு படத்திற்கான  திரைக்கதையை எழுதி முடித்திருக்கிறார். வரலாற்றுக் கதை எனவும், ஏற்கனவே அமெரிக்கா, டென்மார்க் என்று பல நாட்டில் இந்தப் படத்திற்கான அனிமேஷன் வேலைகள் ஆரம்பித்தாகிவிட்டதாகவும் கூறுகிறார்.  படத்தின் பெயர் சங்கமித்ரா, தீபிகா படுகோன் கதாநாயகியாக நடிக்கலாம் என்று கோலிவுட் வட்டாரம் சொல்கிறது. ஆனால் படத்தயாரிப்புக் குழுவிடமிருந்து, நடிகர்கள், படப்பெயர் போன்றவை குறித்த உறுதியான தகவல்கள் வெளியிடப்படவில்லை. ஆனால்,  படம்  எந்திரன், பாகுபலி, 2.0 எல்லாவற்றையும் விட பெரிய பட்ஜெட்டில் இருக்கும் என்றும் சொல்கிறார் சுந்தர். சி.  

தேனாண்டாள் ஃப்லிம்ஸின் 100வது தயாரிப்பாக வெளிவர இருக்கிறது இந்தப் படம். தன் வாழ்நாள் கனவுப் படமாக இது இருக்கும் என்று பகிர்ந்திருக்கிறார் சுந்தர் சி. சாபு சிரில் இந்தப் படத்திற்கான  ஆர்ட் டைரக்‌ஷன் பணியைச் செய்கிறார். கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் பணியை பாகுபலி-2, நான் ஈ ஆகிய படங்களில் பணியாற்றிய கமலக்கண்ணன் மேற்கொள்கிறார்.  எழுத்தாளர் பிரபஞ்சன் மற்றும் பத்ரி நாராயணன் என பிரபலமானவர்கள் படத்தின் திரைக்கதையில் பங்காற்றிக் கொண்டிருக்கிறார்கள். 

இந்தப் படத்திற்கான அறிவிப்பை அடுத்த மாதத்தில் வெளியிடவுள்ளதாக  தெரிவித்துள்ள அவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் இந்தப் படத்தை இயக்க உள்ளார்.

சுந்தர்.சி தயாரிப்பு மற்றும் நடிப்பில் முத்தின கத்திரிக்கா படம் தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!