சென்சார் போர்ட் பிரச்னைகளுக்கு மணி கட்டுமா மெட்ரோ படம்?


சமீபத்தில் சென்சார் போர்டில் ரிஜக்ட் ஆகி, திருப்பி அனுப்பி, பின்னர் ‘ஏ’ சான்றிதழுடன் இன்று வெளி ஆகிறது  மெட்ரோ. சிரிஷ், பாபி சிம்ஹா, சென்றாயன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இந்தப் படத்தின் கதை செயின் பறிப்பு, அதன் பின்னணியில் உள்ள தங்கத்தின் கருப்பு சந்தை பற்றிய விபரம், பெண்கள் எப்படி ஏமாறுகிறார்கள் என க்ரைம் த்ரில்லராக வெளிவருகிறது.

தொடக்கத்தில் சென்னையிலுள்ள சென்சார் போர்டு அலுவலகத்திற்கு சென்றபோது, படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர் நிராகரித்து விட்டனர். மீண்டும் படத்தை சென்னையில் உள்ள மறு தணிக்கைக் குழுவிற்கு எடுத்துச் சென்றபோது, அதே படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் உடன் படத்தைத் திரையிட அனுமதி கிடைத்தது. காட்சிகள் எதையும் நீக்கவும் சொல்லவில்லை.

முதலில் தணிக்கைக் குழுவில் இருந்து நிராகரிக்கப்பட்ட படம், மறு தணிக்கையில் ஏற்கப்பட்டுள்ளது. ஆக, தணிக்கைக் குழுவிற்குள்ளேயே இத்தகைய குளறுபடிகள் உள்ளன. தவிர, ‘ஏ’ படம் என்றால், மக்கள் மத்தியில் தவறான எண்ணமே உள்ளது. அத்தகைய எதிர்மறை எண்ணத்தை விலக்கி, அதன் உண்மையான அர்த்தம் என்ன என்பதையும் மக்களுக்குத் தெரிவிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. தணிக்கைக் குழு இதற்கு என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பது பற்றி, இயக்குநர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் மூலம் வலியுறுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு மெட்ரோ படத்தின் சென்சார் பிரச்னை ஓர் அடித்தளம் ஆகியிருக்கிறது.

சென்ற வாரம் வெளியான உட்தா பஞ்சாப் படமும் இதேபோல சென்சார் பிரச்னைகளைச் சந்தித்து. நீதிமன்றம் வரை அந்தப் பிரச்னை சென்றதும் குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!