நயன்தாராவின் வெற்றிக்கான ரகசியம்.. இதுவாகவும் இருக்கலாம்!


நேற்றுவரை சர்ச்சையில் சிக்கிய  தமிழ் நடிகைகள் முகவரி இல்லாமல் காணாமல் போய் இருக்கிறார்கள். 'ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி" மாதிரி சிம்பு, பிரபுதேவா, ஆர்யா என்று  ஏகப்பட்ட ஹீரோக்களிடம் உருகி, பழகி, விலகி வந்தவர் நயன்தாரா.  ஆயிரத்தெட்டு  சர்ச்சைகளில் மாட்டினாலும் அபூர்வ பெண்மணியாக இருக்கிறார்.  தமிழ்சினிமா வரலாற்றில் ஒரு நடிகை  காதல் விவகாரத்தில் சிக்கினால்  கதை அம்பேலாகி காணாமல் போய்விடுவார்.  'இனிமே இவர் நம்மாளு இல்லை, அவரோட ஆளு' என்று  அந்த நடிகையின்  மார்க்கெட் தடாலடியாக சரிந்துவிடும். இதுதான் தமிழ்சினிமா இதுகாறும் கண்டுவரும் உண்மை. . இதற்கெல்லாம் மாறாக, விதிவிலக்காக   சர்ர்சையில் சிக்கச்சிக்க நயன்தாராவின் பாப்புலாரிட்டி பவர் எகிறிக் கொண்டே செல்கிறது.  இப்போது இரண்டரை கோடி சம்பளம் வாங்கும் நம்பர் ஒன் நடிகையாக இருக்கிறார், நயன்தாரா.

காதல் விவகாரத்தில் நயன்தாரா எப்படியோ.. அது காதலித்தவர்களுக்குத்தான் தெரியும். ஆனால் மனித நேயத்தில் நயன்தாராவை விஞ்ச யாருமே இல்லை. 'வில்லு" படத்தில் நடித்துக் கொண்டு இருந்தபோது திடீரென அங்குள்ள ஒரு டெக்னீஷியனுக்கு இதயவலி வந்துவிட துடிதுடித்துப் போனார் நயன். உடனடியாக அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சைக்கான முழுப்பணத்தை தானே கட்டி, அவரது உயிரை காப்பாற்றினார்.   தனக்கு உதவியாக இருந்து அழகுபடுத்தும் ஒரு உதவியாளருக்கு  கோயம்பேடு பேருந்து  நிலையம் எதிரிலுள்ள பிரம்மாண்ட அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு கோடிரூபாய் மதிப்புள்ள ஒரு ஃப்ளாட்டை இலவசமாய் வாங்கிக் கொடுத்தார். ‘கையெல்லாம் வசியக்கயிறு தொங்க’ நன்றி சொல்லிக் கொண்டே இருக்கிறாராம் அந்த உதவியாளர்.

புத்தகபுழுவாக இருக்கும் பழைய நடிகரின் பெயரைக் கொண்ட  ஒருவர் இருக்கிறார். பிரபுதேவாக்கு நெருக்கமான நண்பர்  .பிரபுதேவாவும், நயன்தாராவும் காதல் வானில் சுற்றித் திரிந்தபோது நயன்தாராவின் கால்ஷீட் விவகாரங்களை கவனித்துக் கொள்ள பிரபுதேவாவால் அந்த நண்பர் நியமிக்கப்பட்டார். ஒரு கட்டத்தில் நயன்தாரா, பிரபுதேவாவுக்கு பிரிவு ஏற்பட்ட தருணத்தில்  அந்த நண்பர் பிரபுதேவா பக்கம் போகாமல் நயன்தாராவுக்கு பக்க பலமாக இருந்தார். நடிகைக்கு  பைனான்ஸ் நெருக்கடி ஏற்பட்டபோது தோள் கொடுத்து உதவினார்.

சமீபத்தில் விஜயசாந்தி நடித்த 'வைஜெயந்தி ஐ.பி.எஸ்'  ஸ்டைலில் ஒரு  கதையை புதுமுக இயக்குனர் ஒருவர் சொன்னார். அந்தக் கதை நயன்தாராவுக்கு மிகவும் பிடித்துப் போனது.  ஹீரோ டம்மியான அந்த படத்தில் நடிக்க தாராவுக்கு ஆசை. அதுசரி தயாரிப்பளர் யார்?  கதையை முழுவதும் உன்னிப்பாக கேட்டு முடித்த நயன்தாரா,  அருகில்நின்ற பழைய நடிகர் பெயரைக் கொண்ட அந்த நண்பரை அழைத்தார். 'நீங்கதான் இந்த படத்தை தயாரிக்கிறீங்க, நான்தான் நடிக்கிறேன் ஒ.கே-வா' என்று சொல்ல  அவருக்கு சந்தோஷ ஷாக்.  'மேம்...' என்று தழுதழுத்த குரலில் நெகிழ்ந்துபோய் இருக்கிறார். 

நயன்தாராவின் கால்ஷீட்டை கவனித்துக் கொண்டிருந்தபோது, திரைப்படத் துறையில் தயாரிப்பாளர்களிடம் கறாராக சம்பளத் தொகையை  பேசிக் கறந்துவிடும் தனக்கு, தான் தயாரிக்கும் படத்தில்  சம்பளம் வாங்காமலே நடிக்கப் போகிறார் நயன்தாரா என்று தெரிந்ததும் நெகிழ்ச்சிக் கடலில் இருக்கிறாராம் அந்த நண்பர்.

இத்தனை நல்ல உள்ளம் இருப்பதாலோ என்னவோ இவர் செலக்ட் செய்யும் கதாபாத்திரங்களின் புகழ் பாலிவுட் வரை பரவுகிறது

 -- சத்யாபதி

Don't miss this

Do you like the story?

Please Appreciate the Author by clapping!