‘மெட்ரோ’ படத்தின் தெலுங்கு ரீ மேக்கில் நாகசைதன்யா?

மிழில் ஹிட் ஆகும் படங்கள் மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் ரீ மேக் ஆகும். அதிலும் சில படங்கள் மட்டுமே டப்பிங் உரிமைக்கு விற்கப்படும். படத்தயாரிப்பாளருக்கு அந்த விற்பனைத்தொகை ஓரளவுக்கு கை கொடுக்கும். இ5 என்டர்டெயின்மென்ட்ஸ் ஜெ.ஜெயகிருஷ்ணன் தயாரிப்பில், ஆள் படத்தின் இயக்குனர் ஆனந்த் கிருஷ்ணன் இயக்கியுள்ள ’மெட்ரோ’ படம் நேற்று வெளியாகியுள்ளது. தமிழில் புதிய கதைக்களம், வித்தியாசமான மேக்கிங், அதிரடிக்கும் இசை என பல தரப்பிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது மெட்ரோ. வெளியான முதல் நாளிலேயே நல்ல வசூலையும், பெயரையும் பெற்றுள்ளது.

இப்படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையைப் பெற பல்வேறு பெரிய நிறுவனங்கள் போட்டியிடுகின்றன. தமிழகத்திலுள்ள பெரிய தயாரிப்பாளர்கள் சிலரும் இந்தப் படத்தை தெலுங்கில் ரீ மேக் செய்ய உரிமம் கேட்டுள்ளனர். அநேகமாக நாகசைதன்யா அல்லது தற்போது ஒரு பிரேக் தேவைப்படும் மகேஷ்பாபு இந்தப் படத்தில்நடிக்கலாம். அதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது. அதிகமான டிமாண்டினால் அதிக தொகைக்கு இந்தப் படம் விற்பனை ஆகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, மெட்ரோ படம், கன்னட ரீமேக்கிற்கு பெரும் தொகைக்கு விற்றுவிட்டது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!