மாப்பு வச்சிட்டாய்யா ஆப்பு! சந்திரமுகிக்குப் பிறகு மீண்டும் வடிவேலுவும் பி.வாசுவும்! | P.Vasu to direct Lawrence - Ritika - vadivelu combo

வெளியிடப்பட்ட நேரம்: 15:15 (25/06/2016)

கடைசி தொடர்பு:15:35 (25/06/2016)

மாப்பு வச்சிட்டாய்யா ஆப்பு! சந்திரமுகிக்குப் பிறகு மீண்டும் வடிவேலுவும் பி.வாசுவும்!

இயக்குநர் பி.வாசு இயக்கத்தில் சமீபத்தில் கன்னடத்தில் வெளியாகி ஹிட் அடித்திருக்கும் படம் “சிவலிங்கா”. இப்படத்திற்கான தமிழ் ரீமேக் பணிகள் நடந்துவருகிறது.

சிவராஜ்குமார், வேதிகா, ஊர்வசி உள்ளிட்ட பலரும் நடித்து வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது சிவலிங்கா. கர்நாடகாவில் 100 நாட்களை கடந்து ஓடி சாதனை படைத்தது.

எனவே தமிழிலும் நிச்சயம் ஹிட்டாகும் என்று தமிழில் ரீமேக் படத்தையும் பி.வாசு இயக்கவுள்ளார். தமிழில் ராகவா லாரன்ஸ், வடிவேலு, ரித்திகா சிங் மற்றும் வாசுவின் மகனான ஷக்திவேல் வாசு ஆகியோர் நடிக்கவிருப்பது உறுதியாகியிருக்கிறது. வரும் ஜூலை 14ம் தேதி சென்னையில் படப்பூஜை நடைபெறவிருக்கிறது. சென்னையில் ஆகஸ்ட் முதல் வாரம் படப்பிடிப்பை தொடங்கி, தொடர்ந்து பெங்களூர், மைசூர், மும்பை ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறது.

தமன் இசையமைக்கவிருக்கும் இப்படத்தை, சசிகுமார் நடித்த வெற்றிவேல் படத்தை தயாரித்த ‘டிரைடன்ட் ஆர்ட்ஸ்’ ரவீந்திரன் தயாரிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது. பெங்கலுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. 

தவிர, 2005ல் வெளியான சந்திரமுகி படத்திற்குப் பிறகு 11 வருடங்கள் கழித்து மீண்டும் வடிவேலு, பி.வாசு கூட்டணியில் இப்படம் உருவாகுவதால்  நிச்சயம் காமெடி பெரிதும் பேசப்படும் என்றும் சொல்லப்படுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்