அப்போ ரஜினிக்கு போட்டி! இப்போ மத்திய அரசுக்கே வேண்டுகோள்! பவர்ஸ்டாரின் அட்ராசிட்டி

தமிழ் பட நாயகன் மிர்ச்சி சிவா நடிப்பில் சினிமாவை பின்னணியாக வைத்து உருவாகிவரும் படம் “அட்ரா மச்சான் விசிலு”. இப்படத்தில் மிகமிகமிக முக்கிய கேரக்டரில் நடித்துவருகிறாராம் பவர்ஸ்டார். ஜூலை 7ம் தேதி ரிலீஸாகவிருக்கும் இப்படத்திற்கான இறுதிகட்ட வேலைகள் நடந்துவருகிறது. இப்படம் குறித்தும், தன் வாழ்நாள் லட்சியம் குறித்தும், மத்திய அரசுக்கே வேண்டுகோள் விடுக்கும் பவர்ஸ்டாரின் சில வார்த்தைகள்!

“என்னோட லட்சியம்னு பார்த்தீங்கன்னா அனுஷ்கா கூடவும் த்ரிஷா கூடவும் ஹீரோவா நடிக்கனுங்கிறதுதான்.. இந்தப்படத்தோட தயாரிப்பாளர் கோபி கூட என்னோட அடுத்த படத்துக்காக அனுஷ்கா கிட்டேயும் த்ரிஷா கிட்டேயும் பேசிக்கிட்டு இருக்கிறார்.. அவங்க கிடைக்காட்டியும் கூட, அவங்க பேர்ல வேற ஏதாவது பொண்ணுங்க இருந்த அவங்களையாவது கமிட் பண்ணுங்கன்னு சொல்லி வச்சிருக்கேன்..

காமெடிப் படங்கிறதால ஸ்டைல்னு தனியா ஏதும் பண்ணல.. ஆனா எக்கச்சக்க ‘பஞ்ச்’ இருக்கு. இந்தப்படம் வெளியாச்சுன்னா இனி குழந்தைகள் பேசுறது எல்லாம் நம்ம பஞ்ச்சாத்தான் இருக்கும்னா பாருங்களேன். ஹலோ பாஸ், இப்பவும் ரஜினிக்கு நான் தான் போட்டி.

முக்கியமா ஒரு விஷயம், “பவர்ஸ்டார் பிறந்தநாளை தேசிய நாளாக அறிவிக்கணும்னு மத்திய அரசுக்கு வேண்டுகோள் வைக்கிறேன்னு” இந்தப்படத்துல சிவா ஒரு சீன்ல  சொல்லிருக்கார்.. தம்பிக்கு நன்றி.. அது என்ன தேசிய நாள் என்பதை படத்தை பார்த்து தெரிஞ்சிக்கோங்க.. அதுவரைக்கும் சஸ்பென்ஸ்.. இதையும் மறக்காம ரசிகர்கள் கிட்ட சொல்லிருங்க..” என்று சிரிக்காமலே சிரிப்பூட்டுகிறார் பவர்ஸ்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!