வெளியிடப்பட்ட நேரம்: 12:57 (27/06/2016)

கடைசி தொடர்பு:14:07 (27/06/2016)

ரஜினியை அடுத்து ரஞ்சித் இயக்கப்போகும் அடுத்த ஹீரோ யார்?

“அட்டகத்தி”, “மெட்ராஸ்” படங்களைத் தொடர்ந்து ரஜினி நடிப்பில் “கபாலி” படத்தை இயக்கினார் ரஞ்சித். ரஜினியைத் தொடர்ந்து ரஞ்சித் இயக்கவிருக்கும் அடுத்த படத்தின் ஹீரோ யாரென்பது பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.   

நேற்று கபாலி தெலுங்கு ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரஞ்சித், பத்திரிகையாளர்களைச் சந்தித்த போது, "கபாலிக்குப் பின்னர், தனது அடுத்தப் படம் சூர்யா நடிக்கும் அதிரடி ஆக்‌ஷன் படம்" என்று தெரிவித்தார்.

கார்த்தி நடிப்பில் ரஞ்சித் இயக்க மெட்ராஸ் படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்தது. இப்போது சூர்யா படத்தையும் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிக்க திட்டமிட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

தற்பொழுது, சிங்கம் 3ம் பாகத்திற்கான படப்பிடிப்பில் இருக்கிறார் சூர்யா. இப்படத்திற்கான படப்பிடிப்பு அக்டோபர் மாத இறுதிக்குள் முடிவடையும், எனவே ரஞ்சித் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் படம் இந்த வருட இறுதிக்குள் படப்பிடிப்பு தொடங்கும் என்று சொல்லப்படுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்