சிம்புவின் கெட்டப் சீக்ரெட் இதுதானாம்!

‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன், அடுத்ததாக சிம்புவை இயக்கவிருக்கிறார். இந்தப் படத்திற்கு “அன்பானவன் அடங்காதவன் அசராதவன்” என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள்.

இப்படத்தில் சிம்பு, 90 கிலோ எடையுடன் ஒரு கேரக்டர், நார்மலான சிம்பு மற்றும் டி.ராஜேந்தர் கெட்டப்பில் ஒரு கேரக்டர் என்று மொத்தம் மூன்று கேரக்டரில் சிம்பு நடிக்கவிருக்கிறார். டி.ஆர். கெட்டப்பில் சிம்பு இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் இயக்குநர் பகிர, இணையத்தில் வைரலடித்தது அந்தப் புகைப்படம். மேலும் அந்த புகைப்படத்தையும் டி.ஆர். படத்தையும் ஒப்பிட்டு பல மீம்ஸ்களும் இணையத்தை வட்டமிட்டுவருகிறது.

இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக மூன்று நாயகிகள் நடிக்கவிருக்கிறார்கள். அந்த நடிக, நடிகைகளுக்கான தேர்வு தற்பொழுது மும்மரமாக நடந்துவருகிறது. மேலும் யுவன் இசையமைக்கும் இப்படத்தில் ஒன்பது பாடல்கள் இடம்பெறவிருக்கிறது. அதில் ஒரு பாடல் பதிவு முடிவுபெற்றுவிட்டதாகவும், அந்தப் பாடலுக்கு “டிரெண்டிங்” என்று பெயரிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

முதல் கட்டப் படப்பிடிப்பிற்கு டி.ஆர். கெட்டப்பில் தயாராகிவிட்டார் சிம்பு. ஜூலை இரண்டாம் வாரத்தில் மைசூரில் படப்பிடிப்பு தொடங்க திட்டமிட்டிருக்கிறார்கள் படக்குழுவினர். தொடர்ந்து சசிகுமார், ஜெய் நடித்த  “சுப்பிரமணியபுரம்” படத்தின் ஷூட்டிங் நடைபெற்ற மதுரை சுற்றுவட்டாரப் பகுதியிலும் படப்பிடிப்பு நடக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!