சமந்தா காரை பஞ்சராக்கிய ரசிகர்கள்! கூட்டத்தில் போலீஸார் தடியடி!

மதுரையில் நடந்த தனியார் அழகு நிலைய திறப்பு விழா ஒன்றில் நடிகை சமந்தா கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் திரண்ட ரசிகர்களால் நெரிசல் ஏற்பட, போலீஸார் தடியடி நடத்தி கலைத்தனர்.

நேற்று மாலை 3 மணியளவில் நிகழ்ச்சிக்காக காரில் வந்திறங்கினார் சமந்தா. அவர் வருவது தெரிந்ததுமே அந்த இடமே ரசிகர்களின் கூட்டத்தால் நிறைந்தது. அந்த இடத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு,  தள்ளுமுள்ளாகிவிட, பொதுமக்கள் மேடையையும், அங்கிருந்த ஒலிப்பெருக்கி கருவிகளையும் சேதப்படுத்தினர்.

இதனால் கடைக்கு வரவிருந்த விருந்தினர்களால் உள்ளே செல்லமுடியாத நிலை ஏற்பட்டது. நெரிசலில் சிக்காமல் இருக்க மீண்டும் காரினுள் ஏறிச்செல்ல சமந்தா முயன்றிருக்கிறார். அதனால் அங்கிருந்த சிலர் சமந்தாவின் காரின் டயரை கிழித்துப் பஞ்சராக்கியதாக சொல்லப்படுகிறது.

இதனால் போலீஸார் கூட்டத்தை கலைக்க ரசிகர்கள் மீது தடியடி நடத்தினர். தடியடியிலிருந்து தப்பிக்க இளைஞர்கள் தங்களது வாகனங்கள், காலணிகளை விட்டுவிட்டு சிதறியடித்து ஓடினர். போலீஸ் தரப்பில், தடியடி நடத்தப்படவில்லை, கூட்டத்தைக் கட்டுப்படுத்தவே இளைஞர்களை விரட்டினோம் என்று கூறினர்.

இதனால் அப்பகுதி நேற்று முழுவதும் பதற்றமாகவே காணப்பட்டது. அதன்பின் சமந்தா கடைதிறப்பு விழாவை முடித்துவைத்துவிட்டு, போலீஸாரின் உதவியுடன் பாதுகாப்பாக காரில் ஏறிச்சென்றார்.   

Do you like the story?

Please Appreciate the Author by clapping!