அட்லியின் முதல் தயாரிப்பு... ஜங்கிலி முங்கிலி கதவ திற! | Atlee producing a film

வெளியிடப்பட்ட நேரம்: 16:57 (27/06/2016)

கடைசி தொடர்பு:18:48 (27/06/2016)

அட்லியின் முதல் தயாரிப்பு... ஜங்கிலி முங்கிலி கதவ திற!


 

தமிழ்  சினிமாவில் அட்லீஸ்ட் ஐந்து படத்தை இயக்கிய பிறகுதான்  பல இயக்குனர்கள் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்து இருக்கிறார்கள் என்பது வரலாறு.   அட்லி  'ரஜா ராணி', 'தெறி' என்று  இரண்டே படங்களை மட்டுமே  இயக்கி தயாரிப்பாளராகி விட்டார்.  அட்லி முதன்முதலாக தயாரிக்கும்   'ஜங்கிலி முங்கிலி கதவத்  திற' படத்தில்  ஜீவா  ஹீரோவாக நடிக்கிறார்.  இந்தப் படத்தில் இடம்பெறும் ஹீரோவின்  அம்மா வேஷம்  பிரதானமான கேரக்டர்.  'தெறி' படத்தை இயக்கியபோது  அட்லிக்கும், ராதிகாவும் நல்ல புரிதல் உருவானதால்   ' நான் தயாரிக்குற படத்துல ஜீவாவுக்கு  அம்மா கேரக்டர்ல நீங்க நடிக்கிறீர்களா? என்று அட்லி ராதிகாவிடம் கேட்க  மறுப்பே சொல்லாமல் டபுள் ஒ.கே  சொல்லி விட்டார், ராதிகா.

'ஜங்கிலி முங்கிலி கதவத் திற' படம் முழுக்க முழுக்க பேயை மையமாக வைத்து உருவாகும் கதை.   பேய் வேஷம் மிரட்டலானது, சவாலானது  அந்த வேஷத்தில் யாரை நடிக்க வைப்பது என்று பெரிய டிஸ்கஷன் நடந்தது. கடைசியாக எல்லோருடைய வாக்குகளையும் பெற்று வெற்றி பெற்றது ராதாரவி.  பேய்  கதாபாத்திரம் குறித்து ராதாரவிடம் கேட்டபோது, ' இதுவரைக்கும் 200 படத்துல விதவிதமான வேஷத்துல  நடிச்சி முடிச்சுட்டேன்.  ஆனா  பேய் வேஷத்துல இப்பத்தான் முதன்முதலா நடிக்கிறேன் ' என்று சொன்னார்.  அண்ணன் ராதாரவியும், தங்கை ராதிகாவும் ஒரே படத்தில் இணைந்து நடித்தும் பல வருடங்கள் ஆகிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு இருவரும் இணைந்து இந்தப் படத்தில் நடிப்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆக, இனி நடிகர்களுக்கு மட்டுமல்லாது பேய்க்கும் குரல் கொடுப்பார் ராதாரவி!

-  எம். குணா

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்