வெளியிடப்பட்ட நேரம்: 17:42 (27/06/2016)

கடைசி தொடர்பு:18:04 (27/06/2016)

அவர் சந்தோஷமா நல்லா இருக்கணும், ரஜினிக்காக சிறப்பு வழிபாடு!

நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்கா சென்றதைத் தொடர்ந்து அவரது சகோதரர் சத்தியநாராயணன் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்துள்ள ராகு ஸ்தலமான திருநாகேஸ்வரத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தி பரிகாரங்கள் செய்து வழிபட்டார். அதேபோன்று  இன்று காலை பெரியகோவிலில் உள்ள வராகி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தினார். பின்னர் தஞ்சையில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பேசினார்;

‘நேற்று திருநாகேஸ்வரத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தி இருக்கிறோம். அவரது குடும்பத்தார் நல்லா இருக்கணும், சந்தோஷமாக இருக்கனும் என்பதற்காக சிறப்பு பூஜைகள் நடத்தியிருக்கிறோம். ரஜினி, உடல் பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றிருக்கிறார்.  பரிசோதனை செய்வதற்கு ஜூலை 15ம் தேதி தேதி கொடுத்திருக்கிறார்கள்.

மேலும் அவர் கூறுகையில், ‘பரிசோதனைக்காக மட்டுமே அவர் சென்றிருக்கிறார். விரைவில் திரும்பி வருவார். மக்கள் அவரைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அவருக்காக உயிர் கொடுக்க நிறைய பேர் இருக்கிறார்கள். அவரை வாழ வைத்தது இந்த தமிழ்மக்கள். அதற்காக எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது’ என்றார்.

அரசியல் பற்றிய கேள்விக்கு ‘அதை அவர்தான் முடிவு செய்ய வேண்டும்’ என்றவர் ‘நதிநீர் இணைப்புக்கு ரஜினி தருவதாகச் சொன்ன ஒரு கோடி டெபாசிட் செய்யப்பட்டிருக்கிறது. அந்த திட்டம் தொடங்கும்போது கண்டிப்பாக வந்து சேரும்’ என்றும் கூறினார். 

-ஏ. ராம் 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்