’ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்’ அதர்வாவின் அடுத்த படம்! | Atharvaa Murali turns busy His Next Movie

வெளியிடப்பட்ட நேரம்: 11:57 (28/06/2016)

கடைசி தொடர்பு:12:31 (28/06/2016)

’ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்’ அதர்வாவின் அடுத்த படம்!

அருள்நிதி நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கிய த்ரில்லர் ஹிட் படமே டிமான்டி காலனி. இப்படத்தைத் தொடர்ந்து அஜய் இயக்கவிருக்கும் அடுத்த படத்திற்கான பூஜை சமீபத்தில் நடைபெற்றது.

அஜய் ஞானமுத்து இயக்கவிருக்கும் அடுத்த படத்தில் அதர்வா நாயகனாக நடிக்கிறார். இவர் இயக்கவிருக்கும் படத்திற்கு “ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்” என்று தலைப்பிட்டிருக்கிறார்கள்.

நாயகன் அதர்வா  தன்னுடைய ட்விட்டரில், “ அம்மா கிரியேஷன்ஸ் தயாரிப்பில், இன்று மதுரையில் படப்பிடிப்பு தொடங்குகிறது. உங்களின் அன்பும், ஆதரவுடன் என்னுடைய அடுத்த படமான ‘ ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்’ தொடங்குகிறேன்” என்று ட்விட் செய்துள்ளார்.

இப்படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக ரெஜினி நாயகியாக நடிக்கவிருக்கிறார். மேலும் சூரி காமெடி ரோலில் நடிக்கிறார். டி.சிவாவின் அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படம் மட்டுமின்றி, ஏற்கெனவே பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் “ செம போத ஆகாத” என்ற படத்திலும் நடித்துவருவதால் இவ்விரண்டு படங்களும் அடுத்தடுத்து ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close