வெளியிடப்பட்ட நேரம்: 16:25 (29/06/2016)

கடைசி தொடர்பு:17:34 (29/06/2016)

சிம்பு பாராட்டிய ‘ஐயம் சிங்கிள், ரெடி டு மிங்கிள்” பாடல் உருவானது இப்படித்தான்!

பிரபல இசையமைப்பாளர் மறைந்த எல்.வைத்தியநாதன் மகன் எல்.வி.முத்துகுமார்  பாடல் ஒன்றை ரிலீஸ் செய்யப்போகிறார் என்ற தகவல் வந்ததும் அவரைத் தேடிப்பிடித்தோம். பொறியாளன்,  வில்அம்பு ஆகிய படங்களின் நாயகனான ஹரிஷ் கல்யாண், எழுதிப் பாடியுள்ள  ‘ஐ எம் சிங்கிள்' என்ற பாடலுக்கு எல்.வி.முத்துகுமார் இசையமைத்துள்ளார்.  நான் சிம்புவின் கஸின் பிரதர் என ’அடடே’ போட வைத்து  அறிமுகமானார் LV.முத்துகுமாரசாமி.

“ஐயம் சிங்கிள்.. ரெடி டு மிங்கிள்’ - யாருக்கோ செய்தி சொல்ற மாதிரி இருக்கே ப்ரோ?

(சிரிக்கிறார்) அச்சச்சோ.. அப்டிலாம் இல்லைங்க. இன்னைக்கு இருக்கற ஆன்லைன் உலகத்துல இளைஞர்கள் சொல்ல நினைக்கிற மிகப்பெரிய வார்த்தை இதுதான். ‘ஐயம் சிங்கிள், ரெடி டு மிங்கிள்’. பொண்ணுங்க கிட்ட ப்ரபோஸ் பண்ற ஸ்டைல் பாடல். நான் ஒரு 3 நிமிஷத்துக்கு மியூசிக் கம்போஸ் பண்ணி வெச்சிருந்தேன். பாட்டக் கேட்டுட்டு சூப்பர்ப்பா, இத முழுமையாக்கலாமே. அப்படின்னு டீம் உள்ள வந்தாரு ஹரிஷ். அவர் எழுதின வரிகள் தான் இந்தப் பாட்டு!”

 

சிம்பு என்ன சொன்னாரு?

“ இந்தப் பாட்ட மூணு மாசத்துக்கு முன்னாடியே அண்ணா கேட்டுட்டாரு. ரொம்ப நல்லாருக்குனு சொன்னாரு. அவர் ஐயம் சிங்கிள், ஐயம் நாட் ரெடி டு மிங்கிள்னு ஒரு பாட்டு ஏற்கனவே எழுதியிருக்காரு. என்ன ஒரு கோ-இன்ஸிடெண்ட்ஸ் பாருங்க. சூப்பர்..சூப்பர்னு சொன்னாரு!”

உங்களைப் பத்தி சொல்லுங்களேன்!

“ வல்லதேசம்’ படத்துக்கு மியூசிக் போட்டது நான் தான். ஆமா அந்த எல்.வி.முத்து குமாரசாமி நானே தான். சமீபத்துல தள்ளிப்போகாதே, சிம்பு வெர்ஷன் மியூசிக் மிக்ஸிங் கூட பண்ணதும் நான் தான்!” இதுக்கு மேல இன்னும் நிறைய விஷயங்கள் சொல்வாரு ஹரிஷ்” என்றார். 

ஹரிஷ் கல்யாண் தொடர்ந்தார். 

ஹாய்...ஹரிஷ் ’பொறியாளன்’, ’வில் அம்பு’ன்னு வித்தியாசமான முயற்சிகளாவே  இருக்கே உங்க படங்கள்!

 ‘நான் எதுவுமே ப்ளான் பண்ணல.. அதுவா அமையுது. அடுத்து தெலுங்குல ரெண்டு ப்ராஜெக்ட். தமிழ்ல நிறைய கதைகள் வருது. ஆனா நல்ல கதைக்காக வெயிட்டிங்!”

உங்களுக்குள்ள இப்படி ஒரு மியூசிக் ஆர்வமா?

“ நான் படிச்சது விஸ்காம். அப்புறம் மியூசிக் கீபோர்டு, கிதார்னு வாசிப்பேன். பாட்டெழுதணும், பாடணும் இதெல்லாம் ஒரு ஆசையாவே நிறைவேறாம இருந்துச்சு. இப்போ கனவு நினைவாகிடுச்சு. ஒரு பையனோட ப்ரபோஸ், எல்லாத்துக்கும் மேல ட்ரெண்டியா காதல சொல்ற பாட்டு. கேட்டா உங்களுக்கே புரியும் . இனி நடிப்போட இசையையும் தொடர்வேன்!”

வாழ்த்துகள்! 

பாடலைக் கேட்க:

- ஷாலினி நியூட்டன் -

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க