வெளியிடப்பட்ட நேரம்: 10:46 (30/06/2016)

கடைசி தொடர்பு:13:41 (30/06/2016)

‘மெட்ரோ’ சேனல் ரைட்ஸ் யாருக்கு?

மீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் மெட்ரோ, படத்தை வாங்குவதில் இரு பெரும் சேனல்களுக்கு இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. ரிலீஸ் ஆன போது ஏ சென்டர் தியேட்டர்களில் நன்கு ஓடிய படம், தற்போது பி, சி சென்டர்களிலும் நன்கு ஓடுகிறது. வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை வாங்குவதில், எப்போதும் இரண்டு சேனல்கள் மட்டுமே போட்டியிடும். விலை கொஞ்சம் முன், பின் இருந்தாலும் அதில் ஒரு சேனல் மட்டும் எப்போதும் முந்திவிடும். ஒரு முறை வாங்கினாலும், அதையே திரும்பத் திரும்ப ஒளிபரப்பி போட்ட காசை விட பல மடங்கு எடுத்து விடுவர். மார்க்கெட்டிங் யுக்தியால், அவர்கள் எவ்வளவு அதிக தொகை கொடுத்து படத்தை வாங்கினாலும், அதிலிருந்து பல மடங்கு லாபத்தைத் திருப்பி எடுத்து விடுவர்.

இன்றைய இளைஞர்களை ஈர்க்கும் விதத்தில் இருக்கும் கதையம்சமும், பெண்கள் தங்க நகைகளைப் பாதுகாப்பது தொடர்பான மெசேஜ், வித்தியாசமான மேக்கிங் என்பதோடு, கோலிவுட்டின் நம்பிக்கை இயக்குநர்களின் படங்களின் பட்டியலுடன் சேர்ந்துள்ளதால், படத்தின் விலையும் அதிகமாக கேட்கப்படுகிறது. ஜிகர்தண்டா படத்தைப் போலவே இதிலும் பாபி சிம்ஹாவின் நடிப்பு செம மாஸ். அறிமுக நாயகன் சிரிஷ் மற்றும் சத்யாவும் கலக்கியுள்ளனர். ஆக, படம் எல்லா சென்டர் மக்களிடமும் நல்ல ரீச் ஆகும் என்பதால், படத்தை எப்படியும் கைப்பற்ற முயற்சிக்கிறது அந்த சேனல்.

இப்போது, மெட்ரோ படத்தையும் பெருந்தொகைக்கு வாங்கிட, அந்தச் சேனல் பேசி வருகிறது. அதற்கு போட்டியான சேனலும் தயாரிப்பாளர் தரப்பிடம் நல்ல விலைக்குக் கேட்கின்றனர். ஆனாலும், முன்னணியில் உள்ள சேனலுக்கே படம் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நாகசைதன்யா நடிப்பதாகவும் ஏற்கனவே செய்தி வெளியானது.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க