'கபாலி' கேரள விநியோக உரிமையைக் கைப்பற்றினார் மோகன்லால்!

ரஜினியின் புதிய படமான 'கபாலி' மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில், கபாலி படத்தின் கேரளா மாநிலத்தின் விநியோக உரிமையை மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலின் கேக்ஸ் லேப் நிறுவனம் வாங்கியிருக்கிறது.

ரஜினி, விஜய் படமென்றாலே கேரளாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். கேரள ரசிகர்கள் மத்தியிலும் இவர்களுக்கு செல்வாக்கு அதிகம் உள்ளது. இந்நிலையில், கபாலி திரைப்படம் வெளியாகவிருப்பதால், இப்படத்திற்கான கேரளா விநியோகஸ்த உரிமையை அந்தோனி பெரம்பூவர்ஸ் சினிமாஸின் கிளை நிறுவனமான மேக்ஸ் லேப் நிறுவனம் பெற்றிருக்கிறது. மோகன்லால் இப்படத்திற்கான உரிமையை 5.6 கோடி ரூபாய்க்கு விலைக்கு வாங்கியிருக்கிறார்.

குறிப்பாக, இதுவரை எந்தத்  தமிழ் திரைப்படத்தையும் இந்த தொகைக்குப்  பெற்றதில்லை. தவிர, விஜய் நடித்த தெறி படத்தை கேரள விநியோக உரிமை 5.6 கோடிக்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது. கபாலி திரைப்படம் கேரளாவில் முதல் நாள் காட்சி மட்டும் 150 திரையரங்குகளில் திரையிடவிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

ஆனால் கபாலி திரைப்படம் எப்போது வெளியாகும் என்பது மட்டும் கேள்விக்குறியாகவே இருக்கிறது. முதலில் ஜுலை 1ம் தேதி என்று செய்திகள் பரவிவந்தன. பின்னர் ஜூலை 14ம் தேதி பாரிஸில் உள்ள ரெக்ஸ் திரையரங்கிள் வெளியாவதால் அடுத்த நாளான ஜூலை 15ம் தேதி படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்பொழுது கபாலி ஜூலை 22ம் தேதி வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.

ரஜினியுடன் இப்படத்தில் ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், அட்டகத்தி தினேஷ், கிஷோர் மற்றும் வில்லனாக தைவான் நடிகர் வின்ஸ்டன் சாவோ உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.

மோலிவுட்  உலகிலும் கலக்க காத்திருக்கிறார் கபாலி!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!