'கபாலி' படத்திற்கு முதல் நாள் டிக்கெட் ! கிரண்பேடி அறிவிப்பு | Kiranbedi announced FDFS tickets for Kabali movie

வெளியிடப்பட்ட நேரம்: 12:39 (01/07/2016)

கடைசி தொடர்பு:12:54 (01/07/2016)

'கபாலி' படத்திற்கு முதல் நாள் டிக்கெட் ! கிரண்பேடி அறிவிப்பு

 

கலைப் புலி எஸ். தாணு தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், ரஞ்சித் இயக்கத்தில்  உருவாகியுள்ள
" கபாலி “ படத்தின் பாண்டிச்சேரி விநியோக உரிமையை லெஜண்ட்ஸ் மீடியா நிறுவனம் வாங்கியுள்ளது.

லெஜண்ட்ஸ் மீடியா நிறுவனத்தின் உரிமையாளர் ஜி.பி.செல்வகுமார், பாண்டிச்சேரி கவர்னர், மற்றும் முதல்வரை நேரில் சந்தித்தனர். அவர்களிடம், “ தமிழ்ப்  படங்களின் திருட்டு வி.சி.டி. யை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்தார். திருட்டு வி.சி .டி யை முழுமையாக ஒழிக்க நடவடிக்கை எடுப்பதாக பாண்டிச்சேரி முதல்வர் நாராயணசாமி மற்றும் கவர்னர் கிரண்பேடி ஆகியோர் அவர்களிடம் கூறியுள்ளனர்.

கூடவே தங்களது பகுதியை தூய்மையாக வைத்திருப் போருக்கு கபாலி படத்தின் முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கட்  வழங்கவும் உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். நடிகர் ரஜினிகாந்தை பாண்டிச்சேரியின் நல்லெண்ணத்தூதுவராக நியமிக்கவேண்டும் என்று கிரண்பேடி தனது ட்விட்டர்  பக்கத்தில் கருத்துப் பதிவிட்டு அழைப்பு விடுத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்