'ஒன்றாக என்டர்டெயின்மென்ட்' பெயருக்குப் பின்னால் இருக்கும் ரகசியம் இதுதான்!

கௌதம் மேனன் தனது தயாரிப்பு நிறுவனத்துக்கு 'ஒன்றாக என்டர்டெயின்மென்ட்' எனப் பெயரிட்டுள்ளார். அதன் அதிகாரபூர்வ யூடியூப் தளத்தில்தான் அச்சம் என்பது மடமையடா  படத்தின் டீஸர், பாடல்கள் மற்றும் கௌதம் மேனன், தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா படத்திற்கான சிறப்பு பேட்டிகள் உள்ளிட்டவை வெளியாகி வைரலானது.

இந்த 'ஒன்றாக' பெயர் காரணம் இதுதான் என கௌதம் மேனன் தனது சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். அதில், " அடுத்த வருஷம் நாலு ஹீரோக்களை வெச்சு செம எமோஷனலான ஒரு படம் ஆரம்பிக்கிறோம். அந்தப் படத்துக்குப் பேர்தான் ‘ஒன்றாக’. மலையாளத்துல இருந்து ப்ருத்விராஜ், தெலுங்குல இருந்து சாய் சரண்தேஜ், கன்னடத்துல இருந்து புனித் ராஜ்குமார், தமிழில் இருந்து ஒரு ஹீரோனு ஒரே படத்துல நாலு ஹீரோ. இவங்க எல்லாரும் ஒண்ணுசேர்ந்து ஒரு ட்ரிப்புக்குப் போவாங்க. அங்கே நடக்கிற விஷயங்கள்தான் படம்.

இந்த மூணு ஹீரோக்கள்கிட்டயும், ஹீரோயின்களான அனுஷ்கா, தமன்னாகிட்டயும் பேசி அட்வான்ஸ் கொடுத்தாச்சு. தமிழ் ஹீரோ மற்றும் மூன்றாவது ஹீரோயினுக்கான தேடல் போயிட்டு இருக்கு.’’ என அச்சம் என்பது மடமையடா மற்றும் எனை நோக்கி பாயும் தோட்டா படங்களை அடுத்து தனது அடுத்த படம் பற்றிய  தகவலைப் பகிர்ந்துள்ளார்.

சிம்பு - தனுஷ் குறித்து மேலும் பல விஷயங்களை மனம் விட்டு பகிர்ந்துள்ள கௌதம் மேனனின் முழுமையான பேட்டிக்கு: http://bit.ly/29wg6vR

Do you like the story?

Please Appreciate the Author by clapping!