'பஞ்ச்' பேசும் பவர் ஸ்டார்..! ரகுநந்தனின் அட்ரா மச்சான் அனுபவம் | Power Star Speaking Punch!

வெளியிடப்பட்ட நேரம்: 13:09 (04/07/2016)

கடைசி தொடர்பு:14:48 (04/07/2016)

'பஞ்ச்' பேசும் பவர் ஸ்டார்..! ரகுநந்தனின் அட்ரா மச்சான் அனுபவம்

 
'தென்மேற்கு பருவக்காற்று' படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனவர் ரகுநந்தன். அந்தப்  படத்திற்கு இசை அமைத்ததற்காக, தேசிய விருதும் பெற்றவர். அதற்குப்  பிறகு சுந்தரபாண்டியன், மஞ்சப்பை, நீர்ப்பறவை போன்ற படங்களுக்கும் இசை அமைத்தவர். தற்போது, சிவா, நைனா சர்வார், பவர் ஸ்டார் நடிக்கும் ' அட்ரா மச்சான் விசிலு' உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.
 
இந்தப் படம் வரும் ஜூலை-7ஆம் தேதி ரிலீஸாகும் நிலையில் உள்ளது. 
 
''இந்தப்படத்துல ‘யாரு இவ.. அடடா யாரு இவ’ பாடலை ஜி.வி.பிரகாஷ் பாடியிருக்கிறார்.. நான் சொல்றதுக்கு முன்னாடியே டைரக்டர் திரைவண்ணன் தான் இந்தப் பாடலை  ஜி..வி.பிரகாஷை பாடவைக்கலாமேன்னு கேட்டார். எனக்கும் தயாரிப்பாளருக்கும் டபுள் சந்தோசம். ஜி.வி.பிரகாஷ் என்னோட படங்களில் தொடர்ந்து பாடிக்கிட்டு வர்றார்.. அவர் பாடினாலே படம் ஹிட்டாகிடுது.. அந்த வகையில இந்தப் பாடலும் அவ்வளவு அழகா வந்திருக்கு.
 
இந்தப்  படத்தில் சிவாவின் பாடலுக்குக் கூட சீக்கிரமாக இசையமைத்துவிட்டேன். ஆனால், 'பவர் ஸ்டாரின் பாடல் காமெடி கண்டிப்பாக இருக்க வேண்டும். எனவே, கவனமாக இசையமைக்க வேண்டும்' என இப்படத்தின் இயக்குநர் திரைவண்ணன் கேட்டுக் கொண்டார். அதன்படி, ரொம்பவே கஷ்டப்பட்டு, போட்டேன். பின்னணி இசை அமைக்க உட்காரும்போது எல்லாம் பவர்ஸ்டார்-சிவா காம்பினேஷன் என்னை தினசரி சிரிக்க வைத்துக் கொண்டே இருந்தது.  இதில் இன்னொரு விஷயம்,இடைவேளைக்குப் பிறகு வேறமாதிரி சீரியஸா பவர் ஸ்டார் பஞ்ச் பேசுவார். கண்டிப்பாக உங்களை சிரிச்சு, ரசிக்க வைக்கும் இந்தப் படம்'' என்றார் ரகுநந்தன்.
 
-வே. கிருஷ்ணவேணி

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்