த்ரிஷாவா... ஸ்ரேயாவா... சிம்புவின் நாயகி இவர்களில் யார்?! | Trisha or Shriya ? Who's gonna be pair for Simbu in AAA movie

வெளியிடப்பட்ட நேரம்: 14:54 (04/07/2016)

கடைசி தொடர்பு:17:13 (04/07/2016)

த்ரிஷாவா... ஸ்ரேயாவா... சிம்புவின் நாயகி இவர்களில் யார்?!

திக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், சிம்பு நடிக்கும் படம் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் (AAA). படத்துக்கு இசை யுவன் ஷங்கர் ராஜா. இந்தப் படத்திற்கான மூன்று பாடல்களை ஏற்கனவே யுவன் ஷங்கர் ராஜா முடித்துவிட்ட நிலையில், சிம்புவுக்கு பாடல்கள் மிகவும் பிடித்துவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் படத்தில் சிம்புவுக்கு மூன்று வேடம். அதில் நடுத்தர வயது சிம்புவுக்கு ஜோடியாக த்ரிஷா , ஸ்ரேயா இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இதில் ஸ்ரேயா பெரும்பாலும் ஒப்பந்தம் ஆவார் எனத் தெரிகிறது. த்ரிஷா சிம்புவுடன் இணைந்து ’அலை’, விண்ணைத் தாண்டி வருவாயா படங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

சிம்பு-ஸ்ரேயா ஜோடி திரையில் சற்று புதிதாகவும் இருக்கும். அதே போல் தோழா படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்த ஸ்ரேயாவும், தமிழில் கடைசியாக ரௌத்திரன் படத்தில்தான் நாயகியாக நடித்திருந்தார். எனவே இந்தப் படத்தில் ஒருவேளை ஒப்பந்தம் ஆகும் பட்சத்தில், ஸ்ரேயாவுக்கு அது மீண்டும் நல்லதொரு என்ட்ரியாக அமையும் என்பது மட்டும் உறுதி. சிம்பு ஷூட்டிங்கிற்கு சரியா ஒத்துழைப்பதில்லை என கௌதம் மேனன் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இந்நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பிற்கு குறித்த நேரத்தில் வருகை தந்து, படத்தை சொன்ன தேதிக்கு முடித்துக்கொடுப்பாரா என்பதை பார்க்கலாம்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்