ஒரு நிமிஷம் ப்ளீஸ்விகடனின் புதிய தளம் பற்றிய உங்கள் கருத்துக்களைப் பகிர வேண்டுகிறோம்!

vikatan-logo

தீபாவளிக்கு கமல்... பொங்கலுக்கு விஜய்... நியூ இயருக்கு அஜித்..!

  இந்தா, அந்தா என்று இழுத்துக் கொண்டே இருந்த 'விஸ்வரூபம் -2' தீபாவளி திருநாளில்  ரீலீஸ் செய்யும் முயற்சியில் தீவிரமாக இறங்கி இருக்கிறார், ஆஸ்கார் ரவிச்சந்திரன்.  'விஸ்வரூபம் -2" படம் முழுவதும் ரெடியாகி விட்டாலும் கம்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள் மட்டும் கொஞ்சூண்டு  பாக்கி இருக்கிறதாம். தீபாவளிக்கு முன்னரே கிராபிக்ஸ் வேலையை பக்காவாக முடித்து  பண்டிகை நாளில் 'விஸ்வரூபம்-2' பவனிவரும் என்று நம்பிக்கையோடு சொல்கிறார், ஆஸ்கார் ரவிச்சந்திரன். 

இதே பண்டிகை நாளில்  கார்த்திக்கின் 'காஷ்மோரா, தனுஷின்  'கொடி' படமும் வெளியாகின்றன. முன்பு வெளிவந்த  'சிங்கம்' சிங்கம்-2'  படங்களில் சூர்யாவும், அனுஷ்காவும் காதலித்துக் கொண்டே இருப்பார்கள். இப்போது 'சிங்கம்-3' படத்தில் சூர்யாவும், அனுஷ்காவும் திருமணம் செய்து கொள்ளும் காட்சி  காரைக்குடியில் படமாக்கப்பட்டது  'சிங்கம்-3" திரைப்பட ம் முழுவதும் முடிந்து திரையிட ரெடியாக இருக்கிறது. தீபாவளிக்கு ரிலீஸ்  செய்யும் திட்டத்தில் ஹரி இருந்தார். கார்த்தியின் ' காஷ்மோரா'  வெளியாவதால் 'சிங்கம்-3' படத்துக்கு தடைபோட்டு விட்டார்,  சூர்யா.

பொங்கலுக்கு விஜய்யின் 'தளபதி-60' வெளியாகிறது. அந்தத்  திட்டப்படி படப்பிடிப்பைப்  பரபரப்பாக நடத்தி வருகிறார், பரதன். ஏற்கெனவே இயக்கிய 'அழகிய தமிழ்மகன்'  படத்தில் இரண்டு விஜய்களில் ஒரு விஜய் வில்லன் அதுபோன்று 'தளபதி-60' படத்தின் ஒரு விஜய் 'ஆன்ட்டி ஹீரோ'வாக வருகிறார் என்று சொல்கிறார்கள்.  திருநெல்வேலி பின்புலத்தை அடிப்படையாக வைத்து கதை, திரைக்கதையை அமைத்து இருக்கிறார், பரதன். திருநெல்வேலியில் ஷூட்டிங் நடத்தும் திட்டம் முதலில் இருந்ததாம். விஜய்யை பார்க்க கூடும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாது என்பதால் நெல்லையை அப்படியே ஜெராக்ஸ் எடுத்த மாதிரி ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் செட் போட்டு ஷுட்டிங் நடத்தி வருகிறார்கள். 'தளபதி-60' படத்தின் எழுபது சதவிகித  ஷூட்டிங்  வேலையை ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியிலேயே முடிக்கிறார்கள். 

'வேதாளம்' சிவா  இயக்கும் அஜித் படத்தின் படப்பிடிப்பு ' உலகம் சுற்று வாலிபன்' 'ஜப்பானில் கல்யாணராமன்' போன்று முழுக்க முழுக்க வெளிநாட்டிலேயே படமாக்க போகிறார்கள். ஜார்ஜியா, பல்கேரியா, ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளிலேயே நடக்கிறது எந்தெந்த நாடுகளில் படப்பிடிப்பு நடத்துவது என்று டைரக்டர் சிவா, கேமராமேன் வெற்றி, ஸ்டன் மாஸ்டர் செல்வம், ஆர்ட் டைரக்டர் மிலன் ஆகியோர் கொண்ட குழு ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று லொகேஷன்களை பார்த்துவிட்டு திரும்பி இருக்கிறது. இந்த திரில்லர் படத்தில் அஜித் இந்திய உளவாளியாக நடிக்கிறார்.  அஜித் ஜோடியாக அனுஷ்கா நடிக்க, முக்கியமான போலீஸ் அதிகாரி வேஷத்தில் 'இறுதிச்சுற்று" ரித்திகா சிங் நடிக்கிறார்.  அனிரூத் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் முதல் வாரத்தில் தொடங்குகிறது. தமிழ்ப்  புத்தாண்டு ஏப்ரல் 14-ம்தேதி ரிலீஸ் செய்யும் திட்டத்தில் இருக்கிறார், சிவா.

அப்படியே தள்ளிப்போனால் மே-1 அன்று அஜித் பிறந்த நாளன்று இந்தப்படம் வெளியாகும்.

- எம் .குணா 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!