ஃபிலிம்ஃபேர், மாநில விருதுகளில் விட்டதை, சீமாவில் அள்ளிய பிரேமம்!

2012-ம் ஆண்டு முதல் சைமா விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. தென்னிந்திய மொழிப்படங்களுக்காக ஒவ்வொரு ஆண்டும் வெளிநாடுகளில், நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு விருதுகள் வழங்கப்படுகின்றன.

தமிழகத்தில் மெகா ஹிட்டாக ஓடிய மலையாளத் திரைப்படம் பிரேமம். பிரேமம் படத்திற்கு கேரள அரசு முக்கியமான விருதுகள் எதையும் தராமல் ஒதுக்கியது பிரேமம் ரசிகர்களுக்குப்  பெரும் ஏமாற்றத்தைத்  தந்தது. கடந்த மாதம் நடந்த ஃபிலிம்ஃபேர் விருதுகளிலும் பிரேமம் அதிக விருதுகளைப் பெறவில்லை. கடந்த வாரம் நடந்த சைமா விருதுகள் தான் பிரேமம் ரசிகர்களை முதல் முறையாக மகிழ்ச்சியில் திளைத்தனர் .

பிரேமம் அள்ளிய விருதுகள்

சிறந்த படம் : பிரேமம்

சிறந்த நடிகர் (சிறப்பு விருது ) : நிவின் பாலி

சிறந்த இயக்குனர்  : அல்ஃபோன்ஸ் புத்திரன்

சிறந்த புதுமுக நடிகை : சாய் பல்லவி

சிறந்த இசையமைப்பாளர் : ராஜேஷ் முருகேசன்

சிறந்த பாடல் ஆசிரியர் : ஷபரீஷ் வர்மா

சிறந்த ஆண் பாடகர் : விஜய் யேசுதாஸ்

விருதுகளை அள்ளிய நானும் ரவுடி தான்

(கலர்ஃபுல் சைமா விருதுவிழா ஆல்பத்திற்கு படத்தின் மீது க்ளிக்குக!)

நானும் ரவுடி தான் படத்தின் ஷூட்டிங்கில் இருந்தே , பெரிதும் கிசுகிசுக்கப்படும் ஜோடி நயந்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் தான். இடையில் இருவரும் பிரிந்துவிட்டனர் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் சைமா விருதுகளுக்கு, நயனும், விக்னேஷ் சிவனும் இணைந்து சென்றது கடந்த வார கோலிவுட் வைரலானது.

அதற்கு ஏற்றாற்போல  சைமாவிலும் விருதுகளை அள்ளியது நானும் ரவுடி தான் திரைப்படம்.

சிறந்த இசை : அனிருத்

சிறந்த ஆண் பாடகர் :  அனிரூத்

சிறந்த காமெடி நடிகர் : RJ பாலாஜி

சிறந்த நடிகை :  நயன்தாரா....

Do you like the story?

Please Appreciate the Author by clapping!