வெளியிடப்பட்ட நேரம்: 12:26 (05/07/2016)

கடைசி தொடர்பு:12:47 (05/07/2016)

மணிரத்னம் படம்... 'மகிழ்ச்சி'யில் ஆர்.ஜே.பாலாஜி!

ஓ காதல் கண்மணி படத்தினைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கும் புதிய படத்தில், கார்த்தி நாயகனாக நடிக்கிறார். இப்படத்திற்கான முதல்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அதிதி ராவ் நாயகியாக நடிக்கவிருக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தை மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்க, ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

இப்படத்தில் கார்த்திக்கு நண்பனாக ஆர்.ஜே.பாலாஜி நடிக்கவிருக்கிறார். ஆர்.ஜே.பாலாஜி தன்னுடைய ட்விட்டரில், “ அவரின் படங்களைப் பார்த்து வளர்ந்த நான், இப்போ அவரோட படத்திலேயே நடிக்கவிருப்பது எனக்கு கனவு போல இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

கோகுல் இயக்கத்தில் பெரும் பொருட்செலவில் கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா நடிக்கும் கஷ்மோரா படத்தின் படப்பிடிப்பு முடிந்து, டப்பிங் வேலைகளில் தீவிரமாக இருக்கிறார் கார்த்தி. இதைத்தொடர்ந்து, வரும் ஜூலை 8ம் தேதி ஊட்டியில் மணிரத்னம் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்று சொல்லப்படுகிறது.

படப்பிடிப்பின் தொடக்கமாக, ஊட்டியில் பாடல் ஒன்றை படமாக்கவிருக்கிறார்கள். இப்படத்தில் கார்த்தி விமானியாக நடிக்கவிருப்பதால், அதற்கான அடிப்படை பயிற்சிகளையும் மேற்கொண்டுவருகிறாராம்.

தவிர, இப்படத்திற்காக மணிரத்னம்-வைரமுத்து-ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் நான்கு பாடல்களுக்கான இசை முடிந்துவிட்டதாம். இப்படம் காதல் சார்ந்த படமாகவே இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்