வெளியிடப்பட்ட நேரம்: 13:42 (05/07/2016)

கடைசி தொடர்பு:15:05 (05/07/2016)

நயன்தாராவின் புதிய படம் 'டோரா'!

நயன்தாரா நடிக்கவிருக்கும் அடுத்தப் படத்திற்கான தலைப்பை அனிருத் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இந்த தலைப்பு தற்பொழுது வைரலாகி வருகிறது.

"களவாணி", "வாகைசூடவா" படங்களை இயக்கிய சற்குணம் தயாரிக்கவிருக்கும் புதியபடத்தில்  நயன்தாரா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்திற்கு “டோரா” என்று பெயரிட்டுள்ளனர். இப்படத்தை தாஸ் ராமசாமி என்பவர் எழுதி இயக்குகிறார்.

நயன்தாரா நடித்த மாயா படம் போலவே இந்தப்படமும் இருக்கும் ஆனால், நகைச்சுவை கலந்த த்ரில்லர் படமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். விவேக் சிவா, மெர்வின் சாலமன் ஆகியோர் இணைந்து இசையமைக்கிறார்கள்.

குழந்தைகளுக்கு பிடித்தமான டோரா கதாப்பாத்திரம் தான் அனைவருக்கும் நினைவுக்கு வருவதால் படத்தின் தலைப்பு பெருமளவிற்கு ஈர்ப்பை இணையத்தில் ஏற்படுத்தியுள்ளது.

முன்னர், ஜெயம்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன்- நயன்தாரா படத்திற்கான டைட்டில் தான் அனிருத் வெளியிடவிருக்கிறார் என்று தகவல் பரவியது, ஆனால் சற்குணம் படத்திற்கான தலைப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.

நயன்தாரா நடித்த நானும் ரவுடிதான், இது நம்ம ஆளு உள்ளிட்ட படங்கள் ரிலீஸாகி ஹிட் அடித்துவிட்ட  நிலையில், அடுத்ததாக ஜீவாவுடன் திருநாள், கார்த்தியுடன் கஷ்மோரா, விக்ரமுடன் இருமுகன் உள்ளிட்ட படங்கள் ரிலீஸாக தயாராகிவருவது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்