Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

’நெருப்புடா’ பாடகி லேடி காஷ் ஏன் ’ஹாஃப்-கட்’ ஹேர் ஸ்டைல் வைத்திருக்கிறார்?

தினமும் டிரெண்டிங் லிஸ்டில் வருவதும் போவதுமாகவே இருக்கிறது கபாலி. கபாலி பற்றிய ஏதாவது ஒரு செய்தி வெளியாவதும், உடனே வைரலடிப்பதும் சினிமா உலக நியதியாகிவிட்டது. கடந்த சில தினங்களில் கபாலி விளம்பரம் ஏர் ஏசியா விமானத்தில் பறந்தது வானளவில் வைரலடித்தது. அடுத்ததாக கபாலிக்காக ஆல்பம் ஒன்று வெளியாகவிருக்கிறது.

'நெருப்புடா நெருங்குடா'... பாடலுக்காக எக்ஸ்க்ளுசிவ் ஆல்பமாக உருவாகி வருகிறது இந்தப் பாடல். இதற்கான முன்னோட்ட வீடியோ நேற்று இணையத்தில் வெளியானது. இந்தப் பாடலை நெருப்புடா பாடலின் பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜாவுடன் இணைந்து லேடி காஷ் (Lady KASH) என்ற சிங்கர் பாடியிருக்கிறார்.

யாரந்த லேடி சிங்கர் என்று தானே யோசிக்கிறீர்கள்? எந்திரன் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் “இரும்பிலே ஒரு இருதயம் முளைக்குதோ” என்ற பாடலைப் பாடியவர் தான்.  சிங்கப்பூரில் வசித்துவரும் லேடி காஷ் ராப், ஹிப்ஹாப், பாப், வேர்ல்ட் மியூசிக் என்று இளசுகளின் மனதை இசையாலும், இவரின் ஸ்டைலாலும் கிறங்கடித்து வருகிறார்.

2008களில் இவரும், சிங்கர் கிரிஷ்ஷி (Krissy) என்பவரும் இணைந்து பாடி வெளியான ஆல்பங்கள் தான் இவரை உலகளவில் ட்ரெண்ட் பெட்டியின் உச்சியில் அமரவைத்தது. தொடர்ந்து பல ஆல்பங்களிலும், தமிழ்ப்  படங்களிலும் பணியாற்றிவிட்டார். தமிழில் ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ் மற்றும் அனிருத் இசையில் இவரே பாடலெழுதி பாடியும் இருக்கிறார்.

இதுமட்டுமின்று உலகளவில் பெண்களுக்கான சிறந்த ராப் பாடகருக்கான விருதுகளையும் பெற்றிருக்கிறார். இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் தன்னுடைய ஹேர் ஸ்டைலை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருப்பது லேடி காஷின் ஸ்பெஷல்!

இப்போது இவர் வைத்திருக்கும் ஹேர் ஸ்டைல் கொஞ்சம் வித்தியாசம். தலையின் ஒரு பகுதியை முழுவதுமாக ட்ரிம் செய்துவிட்டு, மறு பகுதியில் மட்டும் நீளமாக முடிவளர்த்து விட்டிருக்கிறார் இந்த அம்மினி. அதுமட்டுமின்றி செம்பட்டை நிறத்தில் கலரிங்கும் செய்திருக்கிறார். இந்த ஹேர்  ஸ்டைலுக்கு “ஹாஃப் ஷேவ்டு” கட்டிங் என்று பெயராம். ராப் சிங்கர்களின் மத்தியில் வேகமாகப் பரவி வரும் இந்த ஹேர் ஸ்டைலுக்கு நம்ம ஊரு சிட்டி பசங்களும் பொண்ணுங்களும் கூட அடிமை.

ஏன் இந்த ஹார்ஸ்டைல் என்று ராப் பாடக உலகில் விசாரித்துப் பார்த்தால்,  பாப் சிங்கர்களுக்கு அவர்களின் முகத்தோற்றமும் உடையலங்காரமும் மிக முக்கியம். மைக்கேல் ஜாக்ஸன் அன்றே அவருக்கென்று தனித்துவமான ஸ்டைல் இருக்கவேண்டுமென்று, ஸ்பெஷல் உடைகளை ரெடி செய்து, நிகழ்ச்சியில் தோன்றுவார். அன்றிலிருந்து இன்று வரை இந்த உடையலங்காரத்தையும், ஹேர் ஸ்டைலையும் இளசுகளுக்கு அறிமுகப்படுத்தும் சூப்பர் ஸ்டார்ஸ் இந்த ராப் சிங்கர்ஸ் தான்.

எனவே, ராப் சிங்கர்ஸ் என்றாலே அவர்களுக்கென வித்தியாசமான தோற்றத்திற்காகவே முடியை இவ்வாறு மாற்றுவது வழக்கமாகிவிட்டது. ரசிகர்களை ஈர்ப்பதற்கு ஹார்ஸ்டைலே பிரதானமான ஒன்றாகிவிட்டது.  இந்த ஃபார்முலா பல நேரங்களில் ஹிட் அடித்தும் விடுகிறது. அதனால் தான் இந்த அம்மிணியும் அடிக்கடி ஹார்ஸ்டைலில் பல வித்தைகளை காட்டிவருகிறார்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மகாராஷ்ட்ரா விவசாயிகள் போராட்டம் கற்றுக்கொடுக்கும் பாடங்கள்... கவனிக்குமா தமிழ்நாடு?