சுசீந்திரன் படத்தில் விஷ்ணுவிற்கு ஜோடி யார்?

விஷால் நடிப்பில் உருவான பாயும் புலி  படத்திற்குப் பிறகு, இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிக்கவிருக்கும் படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இப்படத்தில் நாயகியாக மஞ்சிமா மோகன் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியான. ஏனென்றால், சுசீந்திரன் இயக்கத்தில் உதயநிதி, விஷ்ணு விஷால், மஞ்சிமா மோகன் உள்ளிட்டோர் நடிப்பில் புதிய படத்திற்கான பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் படத்திற்கான படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டது. இதனால் அந்தப் படத்திற்கான மஞ்சிமா மோகனிடம் பெறப்பட்ட நாட்களை விஷ்ணு விஷாலின் படத்திற்கு பயன்படுத்துவார்கள் என்று சொல்லப்பட்டது.

ஆனால், விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக தற்பொழுது ஸ்ரீதிவ்யா நடிக்கவிருப்பதாக இப்பொழுது தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் யார் விஷ்ணுவிற்கு ஜோடியென்பதை படக்குழு இன்னும் உறுதியாகக்  கூறவில்லை. ஏற்கெனவே சுசீந்திரன் இயக்கத்தில் ஜீவா நடிக்கும் படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், வரும் ஜூலை 15ம் தேதிக்கு மேல் திண்டுக்கல்லில் படப்பிடிப்பு தொடங்கவிருப்பதாகவும், நடிகர் பார்த்திபன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. வழக்கபோல, சுசீந்திரனின் ஃபேவரைட் இமான் தான் இந்தப் புதிய படத்திற்கும் இசையமைக்கவிருக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!