நயன்தாராவின் 'டோரா' கதை இதுதான்!

 
'களவாணி' இயக்குனர் சற்குணம் தயாரிப்பில் நயன்தாரா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவிருக்கும் படத்திற்கு “டோரா” என்று பெயரிட்டுள்ளனர். 
 
இப்படத்தை தாஸ் ராமசாமி என்பவர் எழுதி இயக்குகிறார். இதில்  நயன்தாராவிற்கு ஜோடியாக நடிக்கவிருக்கும் நடிகர் யார் என்கிற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது. தனக்கென தனித்துவமிக்க கதாப்பாத்திரத்தில் நயன்தாரா நடித்த அனாமிக்கா, மாயா போன்ற படங்களில் படத்தின் ஒரு சில சீன்களில் மட்டுமே ஹீரோக்கள் வந்து போனார்கள். ஆனால் டோரா படத்தைப் பொருத்தவரை நயன்தாராவிற்கு ஜோடியாக காதலர் அல்லது கணவர் கதாப்பாத்திரங்கள் இல்லை.  டோரா படம் கொலை சம்பந்தமான கதைக் களத்தைக் கொண்டிருக்கும். இதில் அந்த கொலையாளி யார் என்பதைக்  கண்டுபிடிக்கும் கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்கிறார். 
 
த்ரில்லர் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் தம்பி ராமையா, ஹரிஸ் உத்தமன் போன்றோரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவும், விவேக் சிவா, மெர்வின் சாலமன் ஆகியோர் இணைந்து இந்த படத்திற்கு இசையமைக்கிறார்கள். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!