இது சிவலிங்கா! வடிவேலுவுடன் அதிரடிக்கும் ராகவாலாரன்ஸ், ரித்திகா | Raghava Lawrence-Ritika Singh's 'Shivalinga' begins today

வெளியிடப்பட்ட நேரம்: 13:34 (14/07/2016)

கடைசி தொடர்பு:13:35 (14/07/2016)

இது சிவலிங்கா! வடிவேலுவுடன் அதிரடிக்கும் ராகவாலாரன்ஸ், ரித்திகா

மொட்ட சிவா கெட்ட சிவா படத்திற்கான படப்பிடிப்பு நேற்று முடிவடைந்த நிலையில், அடுத்தப் படத்திற்கான பூஜையை இன்று(வியாழன்) தொடங்கிவிட்டார் ராகவாலாரன்ஸ். 

பி.வாசு இயக்கத்தில் ராகவாலாரன்ஸ், வடிவேலு, ரித்திகாசிங் மற்றும் வாசுவின் மகன் ஷக்திவேல் வாசு, ஊர்வசி, பானுப்ரியா, ராதாரவி உள்ளிட்டோர் நடிக்கவிருக்கும் படமே சிவலிங்கா. இப்படத்திற்கான பூஜையுடன் படப்பிடிப்பும் இன்று தொடங்கியது.

இயக்குநர் பி.வாசு இயக்கத்தில் சமீபத்தில் கன்னடத்தில் வெளியாகி ஹிட் அடித்திருக்கும் படம் “சிவலிங்கா”. சிவராஜ்குமார், வேதிகா, ஊர்வசி உள்ளிட்ட பலரும் நடித்து வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது சிவலிங்கா. கர்நாடகாவில் 100 நாட்களைக் கடந்து ஓடி சாதனை படைத்தது.  இப்படத்திற்கான தமிழ் ரீமேக்கில் தான் ராகவாலாரன்ஸ் நடிக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் வரும் ஆகஸ்ட் முதல் வாரம் படப்பிடிப்பை தொடங்கி, தொடர்ந்து பெங்களூரு, மைசூர், மும்பை ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறது. தமன் இசையமைக்கவிருக்கும் இப்படத்தை, சசிகுமார் நடித்த வெற்றிவேல் படத்தைத் தயாரித்த ‘டிரைடன்ட் ஆர்ட்ஸ்’ ரவீந்திரன் தயாரிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

சிவலிங்கா படத்தை 2017 பொங்கல் நேரத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. கடந்த 2005ல் வெளியான சந்திரமுகி படத்திற்குப் பிறகு 11 வருடங்கள் கழித்து மீண்டும் வடிவேலு, பி.வாசு கூட்டணியில் இப்படம் உருவாகுவதால்  நிச்சயம் காமெடி பெரிதும் பேசப்படும் அளவில் இருக்கும் என்று கூறுகிறார்கள் படக்குழுவினர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்