சிவகார்த்திகேயனின் 'ரெமோ' ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் “ரெமோ” படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்புகள் சென்னையில் நடந்துவருகின்றன. இப்படத்திற்கான ரிலீஸ் தேதியை தற்பொழுது அறிவித்துள்ளனர்.

சிவகார்த்திகேயன், கீர்த்திசுரேஷ், சதீஷ், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் பெரும் பொருட்செலவில் உருவாகிவரும் படம் ரெமோ. இப்படத்திற்கான ரிலீஸ் தேதியை ட்விட்டரில் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். வரும் அக்டோபர் 7ம் தேதி வெளியாகிறது ரெமோ. அக்டோபர் 7ம் தேதி நவராத்திரி விடுமுறை என்பதால், அந்த நாளை படக்குழு தேர்ந்தெடுத்திருப்பதாகக்  கூறப்படுகிறது. 

சிவகார்த்திகேயன் நடித்த 'எதிர்நீச்சல்', 'மான்கராத்தே', 'காக்கிச்சட்டை' ஆகிய படங்களுக்கு இசையமைத்த அனிருத், தான் இப்படத்திற்கும் இசையமைத்திருக்கிறார். ரெமோவின்  ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ஒரு பாடல் ஜூன் 23 ம் தேதி பிரம்மாண்டமான முறையில் வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் இயக்குநர் ஷங்கர் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரெமோவுக்காக இளைஞன், முதியவர், நர்ஸ் என்று மூன்று கேரக்டர்களில் தோன்றுகிறார் சிவகார்த்திகேயன். அவரை கேமராவில் செதுக்கி இருப்பது பி.சி.ஸ்ரீராம் என்பது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!